MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பாஜக கூட்டணிக்கு அழைத்தார்கள்.! கையெடுத்து கும்பிட்டு விட்டு திரும்பி விட்டேன் - திருமாவளவன்

பாஜக கூட்டணிக்கு அழைத்தார்கள்.! கையெடுத்து கும்பிட்டு விட்டு திரும்பி விட்டேன் - திருமாவளவன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்ததாகவும், அதை மறுத்துவிட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
Published : May 06 2025, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழகத்தில் அரசியல் களம்

தமிழகத்தில் அரசியல் களம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக தற்போதே பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில், அதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக அணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் தொடர்கிறது. இந்த சூழ்நிலையில் அதிமுக- பாஜக கூட்டயில் புதிய கட்சிகளை இணைக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாஜகவில் இருந்து அழைப்பு வந்ததாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  வணிகர் தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி ஒருங்கிணைக்கும் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மாநாடு சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெற்றது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
திருமாவளவனை தவறாக கணக்கு போடாதீர்கள்

திருமாவளவனை தவறாக கணக்கு போடாதீர்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்  பேசிய அவர்,  சாதியவாதிகளோடும் மதவாதிகளோடும் எந்தச் சூழலிலும்  கைகோர்க்க மாட்டோம் இதை வெளிப்படையாக அறிவிக்கிறோம். துவக்க காலத்தில் கைகோர்ப்போம் என்றார்கள் கை கோர்த்தார்கள்,

பிறகு நமக்கு எதிராகவே தலித் அல்லாதோர் இயக்கத்தை ஆரம்பித்து என்னை கொலை செய்யும் அளவிற்கு வன்மத்தை பரப்பினார்கள். இதுவா அரசியல்?  ஒருபோதும் அவர்களுடன் கைகோர்க்க மாட்டோம். சராசரி அரசியல்வாதியை போல் திருமாவளவனை கணக்கு போடாதீர்கள் அது எந்த காலத்திலும் நடக்காது.

35
பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது

பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது

பாமகவை எதிர்ப்பதால் வன்னிய சமூகத்தை எதிர்ப்பதாக பொருள் இல்லை, எந்த காலத்திலும் வன்னிய சமூகத்திற்கு எதிரானவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் அல்ல திமுக அதிமுக என்ற இரு கட்சிகளும் வலுவாக இருந்தால் தான் பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது.

ஜெயலலிதா இல்லாத காரணத்தை கொண்டு அதிமுக உடன் கூட்டணி வைத்து அதிமுகவின் வாக்குகளை பெற்று பாஜக வலிமையானதாக காட்டிக் கொள்ள முயல்கிறது. ஜெயலலிதா இல்லாமலேயே 66 எம்எல்ஏக்களை வென்றது அதிமுக பிறகு ஏன் பாஜகவை தோளில் சுமக்க வேண்டும். பாஜகவால் ஒரு தொகுதியில் ஆயிரம் ஓட்டு நிச்சயமாக வரும் என்பதை உறுதியாக உங்களால் சொல்ல முடியுமா?

45
மதவெறி அசியல் தலை தூக்கும்

மதவெறி அசியல் தலை தூக்கும்

ஆனால் பாஜக நிற்கும் தொகுதிகளில் வாங்கும் அத்தனை வாக்குகளும் இரட்டை இலைக்கு சொந்தமானது. இதன் மூலம் தமிழ்நாட்டில் நச்சு அரசியல் பரவும், மதவெறி அசியல் தலை தூக்கும். இதனை தயவு கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவுரை கூறவில்லை ஆனால் அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறேன்.

பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுக தனக்குத்தானே குழி பறித்துக் கொள்கிறது என்பதை உரிமையோடு சுட்டிக்காட்டுகிறேன். பாஜக அரசின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் என்னுடன் பேசினார்,

55
பாஜக கூட்டணியில் இணைய அழைப்பு- திருமாவளவன்

பாஜக கூட்டணியில் இணைய அழைப்பு- திருமாவளவன்

பாஜகவிற்கு அழைத்தார் அதெல்லாம் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு திரும்பி விட்டேன். மதசார்பற்ற கூட்டணியில் இடம்பெறுகிறோம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெல்ல வேண்டும்,  மு க ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதை விட சனாதன சக்திகள் எந்த சூழலிலும் வலிமை பெற்று விடக்கூடாது, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடுதலை சிறுத்தைகள் வீழ்த்தினார்கள் என்ற சாதனையை நாம் செய்ய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
அதிமுக பாஜக கூட்டணி
திமுக கூட்டணி கட்சிகள்
மு. க. ஸ்டாலின்
தேர்தல்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Related Stories
Recommended image1
அடுத்தவர் வீட்டின் கதவை மூட திருமாவளவன் யார்? இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்!
Recommended image2
விஜய்யோடு கூட்டணி, அதிமுகவில் துணை முதலமைச்சர் பதவி.! நிராகரித்தது ஏன்.? திருமா பரபரப்பு பேச்சு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved