MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்க மறந்துவிட்டீர்களா.? தமிழக அரசு வெளியிட்ட லாஸ்ட் சான்ஸ்

பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்க மறந்துவிட்டீர்களா.? தமிழக அரசு வெளியிட்ட லாஸ்ட் சான்ஸ்

பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்ய வேண்டும். 15 ஆண்டுகள் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2009 டிசம்பர் வரை பிறந்த குழந்தைகளுக்கு டிசம்பர் 31 வரை பெயர் சேர்க்க வாய்ப்பு.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Nov 03 2024, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிறப்பு சான்றிதழ்

மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக பிறப்பு சான்றிதழுக்காக விண்ணப்பிக்கப்படும். மேலும் பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான சான்றாகும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்ய வேண்டும்.  மேலும் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும்.

ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்தக் குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்துக்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு / இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்தவித கட்டணமும் இன்றி பெயரை பதிவு செய்திடலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பிறப்பு சான்றிதழ் கால அவகாசம்

12 மாதங்களுக்கு பின்னர் குழந்தையின் பெயரை 15 ஆண்டுகளுக்குள் உரிய கால தாமத கட்டணம் 200 ரூபாய் செலுத்தி பதிவு செய்திட பிறப்பு இறப்பு பதிவுச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை பெயர் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த நிலையில்  இந்த கால அளவு முடிந்த பின்னரும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை குழந்தையின் பெயரை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டது.

35

 வெளிநாடு செல்வதில் சிரமம்

கால அவகாச நீட்டிப்பு அவ்வாறான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் முடிவற்ற நிலையில் பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்திட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை பெற மற்றும் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற சிரமம் ஏற்பட்டது.

எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கலைந்திட பிறப்பு பதிவு செய்து, 15 ஆண்டு கால அளவு முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் உள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 5 ஆண்டு கால அவகாசம் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. 

45

15ஆண்டுகள்- பிறப்பு சான்றிதழ்

எனவே பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின், பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளிச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சி பிறப்பு இறப்பு பதிவு அலுவலகம். 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

55

இனியும் நீட்டிக்க முடியாது

பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்ய கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி டிசம்பர் 2009 வரை பதிவு செய்யப்பட்ட குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் சேர்க்க, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலங்களில் தகுந்த ஆவணங்களுடன் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பதிவு செய்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.


 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சென்னை மாநகராட்சி
மருத்துவமனை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி நேரம் மின்தடை!
Recommended image2
Now Playing
விசிகவுக்கு ஷாக்..! திமுகவில் இணைந்த பனையூர் பாபு..! ஸ்டாலின் அளித்த வரவேற்பு வைரல்
Recommended image3
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved