MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Kamal hasan : கமலை மன்னிப்பு கேட்க சொல்லுவதா.! கர்நாடக நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

Kamal hasan : கமலை மன்னிப்பு கேட்க சொல்லுவதா.! கர்நாடக நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படம் கன்னட மொழி குறித்த சர்ச்சையால் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய நிலையில், மன்னிப்பு கோர வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது உச்சநீதிமன்றம் 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jun 17 2025, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கமல்ஹாசனின் கன்னட மொழி சர்ச்சை
Image Credit : instagram

கமல்ஹாசனின் கன்னட மொழி சர்ச்சை

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முன்னதாக இந்த திரைப்பட விளம்பர நிகழ்வில் கமல்ஹாசன் கலந்து கொண்ட போது தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது என கருத்தை பெஙு்களூரில் தெரிவித்திருந்தார். இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து 'தக் லைஃப்' திரைப்பட வெளியிட தடை விதித்தனர். 

மேலும் கர்நாடகா அரசும் கமலுக்கு எதிராக கருத்தை பதிவு செய்ததது. இதன் காரணமாக கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படம் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் தனது புதிய படமான 'தக் லைஃப்' வெளியீட்டிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி, காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரிய மனு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

24
கமலுக்கு எதிராக சீறிய கர்நாடக நீதிமன்றம்
Image Credit : Asianet News

கமலுக்கு எதிராக சீறிய கர்நாடக நீதிமன்றம்

இந்த மனு நீதிபதி எம். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது கமல்ஹாசனைக் கடுமையாகக் கண்டித்த நீதிபதி, கன்னட மொழி தொடர்ப்பாக கமல் கருத்து தெரிவித்துள்ளார் அவர் வரலாற்று ஆய்வாளரா? கன்னட மக்களின் மனம் புண்படுகிறது.

 கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் படத்தை ரீலிஸ் செய்வதற்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது எனக் கூற கமல் வரலாற்று ஆய்வாளரா? ராஜகோபாலாச்சாரி கூட மன்னிப்பு கேட்டார். இன்றைய பதற்றமான நிலைக்கு நீங்களே காரணம். ஆனால் மன்னிப்பு கேட்காமல் அலட்சியம் காட்டுகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

Related Articles

Related image1
எழவே முடியாத அளவிற்கு அடி வாங்கிய 'தக் லைஃப்'.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
Related image2
சிம்பு - சந்தானம் இடையே மோதலா? STR 49 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டது ஏன்?
34
கமல் மன்னிப்பு கேட்க வற்புறுத்தல்
Image Credit : @kamal haasan

கமல் மன்னிப்பு கேட்க வற்புறுத்தல்

இதனையடுத்து கமல் விளக்கம் அளித்து கடிதம் அளித்த நிலையில அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே என நீதிபதி கூறியிருந்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விவாதத்தின் போது  கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படம் வெளியிடப்படாது என கமல் தரப்பு தெரிவித்திருதது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணை ஒத்திவைத்திருந்தார். இதனிடையே  உச்சநீதிமன்றத்தில் கமல் தரப்பில் வழக்கு தொடர்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று வந்த போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், திரைப்படம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருந்தால் அதனை எந்த பிரச்னையில்லாமல் திரையிடுவதற்காக பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

44
கர்நாடகா நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
Image Credit : ANI

கர்நாடகா நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

தக் லைஃப் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நீதிபதிகள், கன்னட மொழி குறித்து கமலஹாசன் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. உயர்நீதிமன்றம் எப்படி கூறலாம்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தணிக்கை சான்றிதழ் பெற்ற எந்த படமாக இருந்தாலும் அது வெளியாவதை தடுக்க முடியாது.  சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது உயர்நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றத்தின் கடமை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
தக் லைஃப்
உச்ச நீதிமன்றம்
கர்நாடகா

Latest Videos
Recommended Stories
Recommended image1
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Recommended image2
தவெக கூறுவது அத்தனையும் பொய்! விதியை மீறிய விஜய் மீது நடவடிக்கையா? உண்மையை புட்டு புட்டு வைத்த காவல்துறை
Recommended image3
தோழர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு..! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு
Related Stories
Recommended image1
எழவே முடியாத அளவிற்கு அடி வாங்கிய 'தக் லைஃப்'.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
சிம்பு - சந்தானம் இடையே மோதலா? STR 49 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டது ஏன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved