Ration Card : புதிய ரேஷன் கார்டு.! தயார் நிலையில் ஒரு லட்சம் ஸ்மார்ட் கார்டு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
தமிழகத்தில் 2.80 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த நிலையில், 92,000 பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 80,000 கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன, தவறான தகவல் அளித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கார்டின் அவசியம்
தமிழகத்தில் ரேஷன் கார்டு முக்கிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. அரசின் சலுகைகளை பெற கட்டாயமாகும். குறிப்பாக மானிய விலையில் ரேஷன்கடைகளில் உணவுப்பொருட்களான அரசி, சக்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை பெற தேவைப்படுகிறது. இது மட்டுமில்லாமல் பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படுகின்ற வேட்டி சேலை மட்டுமில்லாமல் பரிசு பொருட்களுக்கும் அடிப்படை தேவையாக உள்ளது.
மேலும் மழை வெள்ள காலத்தில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அரசின் உதவி தொகையை பெறுவதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம், மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கும் ரேஷன் கார்டு கட்டாயமாகும். மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 100 நாள் வேலைக்கான பணி அட்டை ஆகியவற்றை பெறுவதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் குடும்ப அட்டை கட்டாயமாகும்.
குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் முழு நேர நியாய விலை கடைகள் 26 ஆயிரத்து 502 செயல்பட்டு வருகிறது. மேலும் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் பகுதிநேர கடைகள் 10 ஆயிரத்து 452 என மொத்த கடைகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 954ஆக உள்ளது. மேலும் ரேஷன் அட்டைகளிலும் பல வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், வெள்ளை, இளஞ்சிவப்பு, கோதுமை அட்டை, பச்சை மற்றும் நீல அட்டைகள் உள்ளது. இதில் உணவு பொருட்கள் வழங்கப்படும் தன்மையானது மாறுபடுகிறது. குறிப்பாக வெள்ளை நில ரேஷன் அட்டைக்கு வறுமைக்கோட்டு மேலே உள்ளவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படாது.
smart card
ரேஷன் கார்டின் அம்சங்கள்
அடுத்ததாக கோதுமை அட்டையாகும், இந்த அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சக்கரையை தவிர்த்து அதிகமான அறவு கோதுமை வழங்கப்படுகிறது. அந்த வகையில்
அதிகமான கோதுமை அடிப்படையிலான பொருட்கள் தேவைப்படும் குடும்பங்களுக்கு இந்த ரேஷன் கார்டு அட்டை வழங்கப்படுகிறது. நீல அட்டையில் மானிய விலையில் மண்ணெண்ணெய் போன்ற கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகிறது. பச்சை அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது. இளஞ்சிவப்பிலான இந்த பிங்க் அட்டை தாரர்களுக்கு அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக மானியம் கிடைக்கிறது.
ration shop
காத்திருக்கும் 3 லட்சம் பேர்
புதிய ஸ்மார்ட் கார்டுகளை பெற டிஎன்பிடிஎஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து திருத்தங்களையும், மேற்கொள்ளலாம், புதிதாகவும் பதிவு செய்யலாம். இதனையடுத்து உதவி ஆணையரால் சரிபார்க்கப்பட்ட பின்னர் புதிய அட்டைகள் வழங்கப்படும். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதிய அட்டை கோரி 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
இதனை பெறுவதற்காகவே அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக புதிய அட்டைகள் விநியோகிக்கும் பணிகளானது நடைபெறாமல் இருந்து வந்தது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிடம் உரிய நிதி இல்லாமல் திணறி வரும் நிலையில் தற்போது புதிய அட்டை வழங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கப்பட்டது.
உதவிகளை பெற முடியாமல் தவிப்பு
மேலும் நாடாளுமன்ற தேர்தல் பணியானது நடைபெற்று வந்ததாலும். தேர்தல் நடைமுறை செயல்படுத்தப்பட்டதாலும் புதிய அட்டைகள் வழங்குவதற்கான பணிகள் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் தேர்தல் பணிகள் முடிவடைந்த நிலையில் புதிய அட்டை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி ஆகஸ்ட் மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் லட்சக்கணக்கான மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளையும், உரிமைகளையும் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சுமார் 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதால் சரிபார்க்கும் பணி காலதாமதமானதாக தெரிவிக்கப்பட்டிருந்து. எனவே விரைவில் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என கூறப்பட்டது. .
Ration Shop
அச்சிடும் பணி தொடங்கியது
இந்த நிலையில் முதல் கட்டமாக 92ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 80ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இதனிடையே 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் ஒரு லட்டம் பேருக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் சரிபார்க்கும் பணி முடிந்து அட்டைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தவறான தகவல்களை கொடுத்த காரணத்தால் ஆயிரக்கணக்கானோரின் விண்ணப்ங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள உணவு பொருட்கள் வழங்கல் துறையிடம் மேல்முறையீடு செய்யலாம். இதன் மூலம் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டு ரேஷன் அட்டைகள் வழங்க வாய்ப்பு உருவாகும்.
Ration Shop
ஒரு லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டை
மேலும் புதிதாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டவர்களுக்கு இந்த மாதம் உணவு பொருட்கள் வழங்கப்படவில்லையென புகாரும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் இந்த மாத்த்திற்கான உணவு பொருட்கள் நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அடுத்த மாதம் முதல் புதிய ஸ்மார்ட் கார்டு பெற்றவர்கள் உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.