MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • போட்டி போடும் தக்காளி, வெங்காயம் விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? அலறும் இல்லத்தரசிகள்

போட்டி போடும் தக்காளி, வெங்காயம் விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? அலறும் இல்லத்தரசிகள்

சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தக்காளி விளைச்சல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் விற்பனை விலை உயர்ந்துள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Apr 02 2025, 07:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Tomato onion price today : காய்கறிகள் தான் சமையலுக்கு முக்கிய தேவையாக உள்ளது. ரசம் முதல் பிரியாணி சமைப்பது வரை தக்காளி, வெங்காயம் இல்லையென்றால் சுவையை கொடுக்காது, எனவே மற்ற காய்கறிகளை மக்கள் வாங்குவதை விட தக்காளி வெங்காயத்தை தான் அதிகளவு வாங்குவார்கள். அதற்கு ஏற்றார் போல விளைச்சலும் அதிகளவில் இருக்கும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த இரண்டு காய்கறிகளின் விளைச்சல் குறைந்ததால் விற்பனை விலை உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ தக்காளி மற்றும் வெங்காயம் 100 ரூபாயை தாண்டியது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஏறி இறங்கும் தக்காளி விலை

மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதமாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சரிந்தது. 50 ரூபாய்க்கு 4 கிலோ தக்காளி கிடைத்தது. இதே போல 100 ரூபாய்க்கு 4 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. எனவே இது தான் நல்ல சான்ஸ் என பொதுமக்கள் அதிகளவு வெங்காயத்தையும், தக்காளியையும் வாங்கி சென்றனர். இந்த சூழ்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தக்காளி விளைச்சல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் விற்பனை விலை உயர்ந்துள்ளது.

35

உயரும் வெங்காயம் விலை

ஒரு கிலோ தக்காளி ரூ.12-க்கு விற்க்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.24-க்கு விற்பனை ஆகிறது. வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 
 

45

பச்சை காய்கறிகளின் விலை என்ன.?

உருளைக்கிழங்கு ஒரு 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  அவரைக்காய் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும்,

55

உயர்ந்தது கேரட், பீன்ஸ் விலை

முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 1 கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும்,  முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தக்காளி விலை
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
47 MLA-வை வச்சுக்கிட்டு EPS முதல்வராக ஆசைப்பட்டாரா? வறுத்தெடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! 💥
Recommended image2
TVK vs ADMK: விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.! என்ன செய்ய வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி
Recommended image3
திருச்செந்தூர் போற பிளான் இருக்கா..? 31ம் தேதி வரை இலவசமா தரிசனம் செய்யலாம்! கோவில் நிர்வாகம் அதிரடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved