Vegetables Price : ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.? காய்கறி சந்தையில் உச்சத்தை தொடும் பீன்ஸ், அவரைக்காய், இஞ்சி விலை
அண்டை மாநிலங்களில் காய்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. இதே போல அவரைக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், இஞ்சி விலை அதிகரித்துள்ளது.
தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 75 ரூபாய்க்கும், சில்லறை வணிகத்தில் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ 38 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,
கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Vegetables Price Koyembedu
பீட்ரூட் விலை என்ன.?
முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 75க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 60ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Today Rasi Palan 23th June 2024 : இன்றைய ராசிபலன்கள்.. இன்று 12 ராசிக்கும் அதிஷ்டத்தின் நாளா..?
Vegetables Price Today
வாழைக்காய் விலை என்ன.?
புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று 7 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 160ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுக்கு ஒரு முடிவே இல்லையா? இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது.. படகுகள் பறிமுதல்!
vegetables
சுரைக்காய் விலை என்ன.?
எலுமிச்சை ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 45ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 350 முதல் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.