Vegetables Price List : தக்காளி, கேரட், பீன்ஸ் விலை குறைந்ததா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து கேரட், கத்திரிக்காய், அவரைக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை சற்று குறைந்துள்ளது.
இஞ்சி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 160 க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொத்தவரை விலை என்ன.?
கத்திரிக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 60 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 120க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Murugan Temple: ஆடி கிருத்திகை; பால்குடங்களுடன் முருகன் கோவில்களுக்கு படையெடுக்கும் பக்தர்கள்
உருளைக்கிழங்கு விலை என்ன.?
அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை என்ன.?
பீட்ரூட் 1 கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 1 கிலோ 35 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? இல்லையா? சென்னையின் நிலவரம் என்ன? வானிலை மையம் சொன்ன தகவல்!