- Home
- Tamil Nadu News
- தக்காளி, வெங்காயத்தின் ஒரு கிலோ விலை இவ்வளவு தானா.!! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் இல்லத்தரசிகள்
தக்காளி, வெங்காயத்தின் ஒரு கிலோ விலை இவ்வளவு தானா.!! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் இல்லத்தரசிகள்
தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரிந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கிடுகிடுவென உயர்ந்த காய்கறி விலை தற்போது சரசரவென குறைந்துள்ளது.

தக்காளி, வெங்காயத்தின் ஒரு கிலோ விலை இவ்வளவு தானா
காய்கறிகள் தான் சமையலுக்கு முக்கியமானதாகும், அந்த வகையில் தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமையல் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனவே காய்கறி சந்தைக்கு சென்றால் மற்ற காய்கறிகளை வாங்குவதை விட இந்த இரண்டு காய்கறிகளை தான் இல்லத்தரசிகள் அதிகளவில் வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் தான் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கிடு கிடுவென உயர்ந்து ஒரு கிலோ 100 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் காய்கறிகளுக்கு என ஒதுக்கப்பட்ட மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டது.
உச்சத்தில் இருந்த தக்காளி, வெங்காயம் விலை
மேலும் கிலோ கணக்கில் வாங்கி சென்ற மக்கள் அரை கிலோ, ஒரு கிலோ என்ற அளவிலேயே தக்காளி, வெங்காயத்தை வாங்கும் நிலை உருவானது. இதனையடுத்து விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி ஒரு கிலோ தக்காளி 35 முதல் 40 ரூபாய்க்கும், வெங்காயம் 40 ரூபாய்க்கும் பன்னை பசுமை கடைகள் மற்றும் மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் விற்பனை செய்யப்பட்டது.
வெங்காயம் விலை என்ன.?
இருந்த போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்காத நிலையே ஏற்பட்டது. இந்த நிலையில் தான் காரிப் பருவ காய்கறிகளின் வரத்து அதிகரித்ததால் தக்காளி, வெங்காயத்தின் விலையானது சரசரவென குறைந்தது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி கடந்த வாரம் 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெங்காயத்தின் விலையும் சரிந்துள்ளது. ஒரு கிலோ 25 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. மேலும் பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. இதனால் பை நிறைய இல்லத்தரசிகள் காய்களை வாங்கும் நிலை உருவாகியுள்ளது.
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 18 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும்,, பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,
பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெண்டைக்காய், பீன்ஸ் விலை இவ்வளவு தானா.?
காலிஃப்ளவர் 15 முதல் 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,
வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.