சீமானை கைது செய்ய திட்டமா.? விஜயலட்சுமியிடம் விடிய விடிய விசாரணை- போலீசார் நடத்திய திடீர் டிராமாவால் பரபரப்பு
சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் அதிகாலை இரண்டு மணி வரை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று இன்று மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் விஜயலலட்சுமி வாக்குமூலம் அளிக்க உள்ளார்.
சீமான் மீது புகார்
பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி, இந்த படத்தில் இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தார். மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நிலையில் வாழ்த்துக்கள் என்ற படத்தில் விஜயலட்சுமி நடித்த போது இயக்குனர் சீமான் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 2008 ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருவரும் மாலை மாற்றி கொண்டதாகவும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியதாகவும் இதையடுத்து வேளச்சேரியில் உள்ள வீட்டில் இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த தாக விஜயலட்சும் ஏற்கனவே அளித்த புகாரில் தெரிவித்திருந்தார்.
Vijayalakshmi
கருவை கலைத்த சீமான்
மேலும் தான் பலமுறை தான் கர்ப்பம் அடைந்த நிலையில் அவரது வற்புறுத்தலால் கருவை கலைத்ததாகவும் இந்த நிலையில் தன்னிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை வாங்கி கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தன்னை ஏமாற்றிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
விஜயலட்சுமியிடம் விசாரணை
இதனையடுத்து இந்த புகார் மனு மீது விசாரணை செய்ய கோயம்பேடு துணை கமிஷனருக்கு, சென்னை கமிஷனர் உத்தரவிட்ட நிலையில் நடிகை விஜயலட்சுமி ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கோயம்பேடு துணை கமிசனர் உமையாள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். நேற்று 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அப்போது சீமான் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காவல்நிலையத்தில் இருந்து செல்வேன் என நடிகை விஜயலட்சுமி விடாப்படியாக இருந்துள்ளார். இதனையடுத்து அவரை அவரை வெளியே அனுப்ப முடியாமல் போலீசார் திணறினர்.
போலீசார் நடத்திய டிராமா.?
மேலும் காவல் நிலையத்திற்கு வெளியே 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் சேர்ந்தவர்கள் இருந்ததால் போலீசார் பத்திரிக்கையாளர்களை ஏமாற்ற டிராமா மேற்கொண்டனர். அப்போதுதான் நடிகை விஜயலட்சுமி போன்று ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் உருவ ஒற்றுமையுடைய பெண் போலீஸ் ஒருவரை தயார் செய்து அவரது முகத்தை துப்பட்டாவால் மூடி அவசர அவசரமாக காரில் ஏற்றி செல்வதுபோல் போலீஸ் நிலையத்திலிருந்து காரை வேகமாக சென்றது.
இதனையடுத்து அந்த காரை தொடர்ந்து சிலர் தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர்களும் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த வாகனத்தில் எந்த பெண் போலீசும் இல்லாததால் சந்தேகம் அடைந்த நிருப்பர்கள் காவல் நிலையத்தை விட்டு செல்லாமல் அங்கேயே காத்திருந்தனர்.
Vijayalakshmi
விஜயலட்சுமியிடம் அதிகாலை வரை விசாரணை
இதனையடுத்து வேறு வழி இல்லாமல் தனியார் கார் ஒன்றை எடுத்த வந்த போலீசார் சர்வ சாதாரணமாக நடிகை விஜயலட்சுமியை காரில் போலீசார் அழைத்து சென்றனர். இதனையடுத்து நடிகை விஜயலட்சுமியை வீட்டில் வைத்து நள்ளிரவு இரண்டு மணி வரையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இன்று மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் விஜயலக்ஷ்மி வாக்குமூலம் அளிக்க உள்ளார். சீமான் மீது விஜயலட்சுமி கொடுத்த புகாரில் கடந்த 2011 ஆம் ஆண்டு மோசடி , கற்பழிப்பு உள்ளீட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
x
மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம்
இரவு 11 மணி வரை காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய நிலையில், போலீஸ் பாதுகாப்போடு வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மீண்டும் நள்ளிரவு 2 மணி வரை வீட்டில் வைத்து விசாரணை நடைப்பெற்றுள்ளது. இந்தநிலையில் விஜயலட்சுமி கொடுத்த புகாரில் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்
“நான் நல்ல நடிகை இல்ல..” திரைத்துறையில் தனது ஆரம்ப நாட்கள் குறித்து மனம் திறந்த ரம்யா கிருஷ்ணன்