மீண்டும் வெயில் அதிகரிக்கப்போகுதாம்.! அப்போ மழை பெய்யாதா.? வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். மீனவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடி, மின்னலோடு மிதமான மழை
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் தற்போது தான் சென்னை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அடுத்து வரும் நாட்கள் வானிலை எப்படி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (25.09.2024) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
லேசான மழைக்கு வாய்ப்பு
நாளை (26.09.2024 மற்றும் 27.06.2024) நாளை மறுதினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வருகிற 28.09.2024 மற்றும் 29.09.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைக்கு விடுமுறை.! இந்த தேதியில் கண்டிப்பாக மூடனும்- வெளியான அறிவிப்பு
மீண்டும் அதிகரிக்கும் வெப்பம்
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (25.09.2024 மற்றும் 26.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2"-4* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
25.09.2024 முதல் 28.09.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
25.09.2024: தெற்கு வங்கக்கடல், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 26.09.2024: தெற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
காற்றின் வேகம் அதிகரிக்கும்
27.09.2024: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.