வங்க கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம்..! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை- ஆழ்கடல் மீனவர்கள் கரை திரும்ப உத்தரவு
வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும், இது வலுப்பெற வாய்ப்பு இருப்பதால் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வருகிற 26 ஆம் தேதிக்குள் கரை திரும்ப வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் தொடரும் கன மழை
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் மழை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார், அதில் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் புதுவை காரைக்கால் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது.
Chennai Rains
எந்த மாவட்டங்களில் மிக கன மழை
அதிகபட்சமாக திருப்பூரில் 17.செ.மீ மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15 இடங்களில் கன மழையும், 5 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 3 தினங்களுக்கு தமிழகம்,புதுவை, காரைக்காலில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும்,
கன மழையை பொறுத்த வரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிருடங்களில் கன முதல் மிக கன மழையும், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.
Tamilnadu Rains
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னையை பொறுத்தவரை அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். 26 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க்குடும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவே ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 26ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது அடுத்த நிகழ்வுகளை பொறுத்தே புயலாக வலுப்பெறுமா என தெரியவரும் என கூறினார்.
cyclone
இயல்பை விட குறைவான மழை
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை 24 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 31 செ.மீ, இது இயல்பை விட 15 சதவிகிதகம் குறைவு. அதே போல சென்னையை பொறுத்தவரை இயல்பை விட 30% குறைவாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்