ஒரு ரூபாய் செலவு இல்லை.! மாணவர்களுக்கு உயர்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்- வெளியான சூப்பரான அரசாணை
தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும். மேலும், வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் பயணச் செலவையும் அரசு ஏற்கும்.
college student
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு
தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் ஏழ்மையின் காரணமாக மாணவர்கள் படிப்பு பாதியில் நிற்க கூடாது என்ற காரணத்திற்காக இலவச கல்வியை வழங்கி வருகிறது. இது மட்டுமில்லாமல் காலை மற்றும் மதிய உணவு திட்டமும் செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் படிக்கும் போது மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
School Education
உயர்கல்வி செலவை ஏற்கும் தமிழக அரசு
அந்த வகையில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அரசாணையில் அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து நம் நாட்டில் உள்ள தலைசிறந்த நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்வி செலவுகளை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை பெற்றுச்சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
College Students
வெளிநாட்டில் உயர்கல்வி- நிதி உதவி
அதன் படி அக்கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான செல்லும் முதல் பயணத்தொகை முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், நிப்ட், தேசிய சட்டப்பள்ளி உள்ளிட்ட முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த 3 ஆண்டுகளில் இணைந்த மொத்தம் 425 பேருக்கு கல்விச்செலவினமாக ரூ.6 கோடியே 23 லட்சம் நிதி வழங்கி அரசாணை வெளியாகியுள்ளது.
college student
அரசே முழுமையாக ஏற்கும்
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திராவிடமாடல் அரசின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் படி "அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும்.
higher educational institutes
6 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் நன்றி
மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார் என கூறியுள்ளார்.
நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சருக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.