- Home
- Tamil Nadu News
- 10, 12ஆம் வகுப்பு ரிசல்ட் முன் கூட்டியே வெளியாகிறதா? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
10, 12ஆம் வகுப்பு ரிசல்ட் முன் கூட்டியே வெளியாகிறதா? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

School Exam Result Date : பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆண்டு இறுதி தேர்வு தான் மாணவர்களின் கல்வி கற்கும் திறமையை வெளிப்படுத்தும். அந்த வகையில் ஆண்டு இறுதித்தேர்வுக்காக மாணவர்கள் இரவு பகலாக படித்து தேர்வு எழுதுவார்கள். தமிழ்நாட்டில் 10,11,12ஆம் வகுப்பு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன் படி மார்ச் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றது.
school exam result
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள்
12ஆம் வகுப்பு தேர்வினை 7518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள் உள்ளிட்ட 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினர். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை 7557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள் உள்ளிட்ட 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் எழுதினர்.
10ஆம் வகுப்பு தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள் உள்ளிட்ட 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
10th 11th 12th results
வினாத்தாள் திருத்தும் பணி
ஒட்டுமொத்தமாக 10,11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வினை 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவர்கள் எழுதியுள்ளனர். அதன் படி, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 9ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் திருத்தும் பணியானது தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பள்ளி தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதியை விட முன்கூட்டியே வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
TN board exam results
பொதுதேர்வு முடிவுகள் எப்போது.?
அதன் படி 83 மையங்களில் 12ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் திருத்தப்பட்டு வருவதாகவும் எனவே வினாத்தாள் திருத்தும் பணி முன்கூட்டியே முடிக்கப்படவுள்ளதால் தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக வெளியிடப்படும் என தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமின்னபடி மே 9ஆம் தேதியும், 10வது மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதியும் வெளியாகும் என அறிவித்துள்ளது.