ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
தமிழக அரசு மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு வராமல் மாற்று நபரை பாடம் எடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
school teacher
கல்விக்காக தமிழக அரசின் திட்டங்கள்
தமிழக அரசு மாணவர்களின் எதிர்கால நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏழை மற்றும் எளிய மாணவர்கள் பயன் பெறும் வகையில் இலவச கல்வியை வழங்கி வருகிறது. மேலும் மாணவர்களின் வெறும் வயிற்றில் படிக்க கூடாது என்பதற்காகவே காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் உள்ளிட்ட திட்டங்களோடு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மாணவர்களின் வாழ்க்கைக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கியும் வருகிறது.
school teacher
மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு
மாணவர்களின் எதிர்காலத்திற்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதே போல மாணவர்கள் சிறந்தவர்களாக முன்னேறுவதற்கு ஆசிரியர்களின் பங்கு அதை விட முக்கியமானது. எனவே ஆசிரியர்கள் தான் மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களை முன்னேற்றத்திற்காக தினமும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
எந்த நேரமாக இருந்தாலும் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகிறார்கள். அப்படி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர்கள் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது. இருந்த போதும் ஒரு சில ஆசிரியர்கள் சுயநலமாக செயல்பட்டு வருவதாக தகல் வெளியாகியுள்ளது.
School Teacher
ஆசிரியர் சஸ்பெண்ட்
அந்த வகையில் முறையாக பள்ளிக்கு வராமல் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் மாற்று நபர்களை வைத்து பாடம் எடுத்த சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட கரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கே.பாலாஜி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்மீது 17-வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கண்காணிப்பு தீவிரம்
இதனிடையே பல இடங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் மாற்று நபர்களுக்கு குறைந்த சம்பளம் பேசி பள்ளியில் வேலைக்கு வைத்து கொள்ளவதாகவும், இது தமிழ் நாடு முழுவதும் நடைபெறுவதாகவும் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெறுவதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உட்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.