- Home
- Tamil Nadu News
- போட்டி இன்னும் STRONGஆகப் போகிறது! இப்போ சொல்றேன் தவெக - திமுக இடையே தான்! வெறித்தனமாக பேசிய விஜய்
போட்டி இன்னும் STRONGஆகப் போகிறது! இப்போ சொல்றேன் தவெக - திமுக இடையே தான்! வெறித்தனமாக பேசிய விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது வன்மத்தை கக்கிய செயல் என கடுமையாக விமர்சித்தார்.2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என்றும், போட்டி வலுவாக மாறப்போகிறது.

தவெக தலைவர் விஜய்
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் சென்னை அருகே மாமல்லபுரத்தில் கலந்து கொண்டார். எனவே அந்த சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் விஜய் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பேசுகையில்: கரூர் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நம் மீது வன்மத்தைக் கக்கியுள்ளார். அரசியல் செய்யவில்லை அரசியல் செய்யவில்லை எனக் கூறி முதல்வர் சட்டப்பேரவையில் வன்மத்தை கக்கியுள்ளார். சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய உரைக்கு அநாகரிக பதிலடி கொடுக்க விரும்புகிறேன். வண்ண அரசியல் அர்த்தமற்ற அவதூரை சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை மூலம் துடைத்தெரிய போகிறோம்.
கோடிகளை கொட்டி வழக்கறிஞர்கள் நியமனம்
அரசியல் காழ்ப்புடன் நேர்மை திறனற்ற குறுகிய மனம் கொண்ட முதல்வரிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். பொய் மூட்டைகளை அவிழ்த்து விட கோடிகளைக் கொட்டி வழக்கறிஞர்களை நியமித்துள்ளார் முதலமைச்சர். இந்தியாவில் யாருக்கும் எந்த தலைவருக்கும் விதிக்கப்படாத நிபந்தனைகள் விதிக்கப்பட்டது ஏன்? அவசர அவசரமாக தனிநபர் ஆணையம் ஆணையத்தை அவமதிக்கும் வகையில் அரசு உயர் அதிகாரி செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
மண்டையில் கொட்டி அனுப்பி வைத்துவிட்டது
தனிநபர் ஆணையத்தை அவமதித்து தலையில் குட்டு வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டன. முதல்வர் கூறியது பொய் என்பது அதன் ஆணையத்தை மண்டையில் கொட்டி அனுப்பி வைத்துவிட்டது நீதிமன்றம். 50 ஆண்டுகள் அரசியல் இருக்கும் ஒருவர் சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்து வடிகட்டிய பொய்யை கூறியுள்ளார். முதல்வர் கூறியது வடிகட்டிய பொய் என நான் கூறவில்லை, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உண்மையும் மீட்டெடுக்க முடியும் என கோர்ட் கூறியுள்ளது. மனிதாபிமானம் அரசியல் அறம் இன்றி வெறும் பேச்சில் மட்டும் அரசியல் ஆதாயம் தேடும் ஆட்டத்தை முதல்வர் தொடங்கியுள்ளார். உச்சநீதிமன்றம் கேட்டதை எல்லாம் மறந்து உச்சபட்ச அதிகாரம் மயக்கத்தில் இருந்து கொண்டு முதலமைச்சர் பேசினாரோ என கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டு நபர்களுக்கு தான் போட்டி
கடந்த 1972ஆம் ஆண்டுக்கு பிறகு கேள்வி கேட்டு யாரும் இல்லாததால் திமுக தலைமை இப்படி மாறிவிட்டது. முதலமைச்சருக்கு பேச்சில் மட்டும்தான் மனிதாபிமானம் உள்ளது. திமுக அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டது. மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன் என்று அறிக்கை இப்போதே தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். தற்போது ஏற்பட்டுள்ள இடையூறு தற்காலிகமானது இயற்கையும் இறைவனும் மக்கள் சக்தியாக நாம் உடன் இருக்கப் போகிறார்கள். இயற்கையை இறைவனிடம் தமிழ் சொந்தங்கள் வடிவில் மாபெரும் சக்தியாக நம்முடன் இருக்கும் போது வெற்றி நிச்சயம். 2026-ல் இரண்டே இரண்டு நபர்களுக்கு தான் போட்டியே; போட்டி வலுவாக மாற போகிறது; 100% வெற்றி நமக்கே என தெரிவித்துள்ளார்.