MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 4 மணி நேரம் 25 நிமிடம்! 100 போலீஸ் இருந்தும் ஒரு பெண்ணை கண்டுபிடிக்க வக்கில்ல! இதை சொல்ல கூச்சமாவே இல்லையா? இபிஎஸ்!

4 மணி நேரம் 25 நிமிடம்! 100 போலீஸ் இருந்தும் ஒரு பெண்ணை கண்டுபிடிக்க வக்கில்ல! இதை சொல்ல கூச்சமாவே இல்லையா? இபிஎஸ்!

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பவ இடத்தில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்க காவல்துறைக்கு நான்கரை மணி நேரம் ஆனது ஏன் என இபிஎஸ் கேள்வி. 100 போலீசார் இருந்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியாததற்கு முதல்வர் வெட்கி தலைகுனிய வேண்டும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Nov 05 2025, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி
Image Credit : Asianet News

எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி

நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி விளக்கம் அளித்த கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர், ஞாயிற்றுக் கிழமை இரவு 11:20 மணிக்கு காவல்துறைக்கு மாணவியின் நண்பர் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான் மாணவியைக் கண்டதாகவும், அதுவும் அம்மாணவி தானாக வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது காவல்துறை?
Image Credit : Asianet News

4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது காவல்துறை?

இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது காவல்துறை? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி. குற்றவாளிகளை பிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது காவல்துறையால் சம்பவ இடத்தில் நின்றுக்கொண்டே நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

Related Articles

Related image1
இரவு 11 முதல் மாறி மாறி அதிகாலை 3.30 மணி வரை! கோவையில் கல்லூரி மாணவி விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி
Related image2
பாதிக்கப்பட்ட பெண் மயக்க நிலையில் இருக்காங்க! எப்படி குற்றவாளியை கைது செய்தீர்கள்! எதுக்கு போட்டோவை காட்டல! அதிமுக கேள்வி!
34
மாணவி எப்படி சென்றார்?
Image Credit : Asianet News

மாணவி எப்படி சென்றார்?

100 போலீசார் இணைந்து பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக காவல் ஆணையர் சொல்கிறார். நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது."காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு மாணவி எப்படி சென்றார்?" என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, "சிறிய சுவர் ஒன்று இருந்தது; அதை தாண்டிச் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற காவல் ஆணையர், சில நிமிடங்களில், "மிகப்பெரிய சுவர் இருந்தது; அதை தாண்டிச் சென்று அந்த மாணவி இருந்தார் " என தனது கருத்தை மாற்றினார்.

44
திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை
Image Credit : Google

திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை

அங்கு இருந்தது சிறிய சுவரா? பெரிய சுவரா? ஏன் அதைத் தாண்டி காவல்துறை, அதுவும் 100 பேர் கொண்ட படை, சென்று தேடவில்லை? "இருள் சூழ்ந்த தனிமையான இடம் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் காவல்துறை கூச்சப்பட வேண்டும். நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறதா திமுக அரசு? இந்த சூழலில், "ஆக... குற்றவாளிகள் கைது, குற்றப் பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம்" என்று பெருமை பேசுகிறார் பொம்மை முதல்வர். மு.க.ஸ்டாலின் அவர்களே- அதற்கு முன்னால், உங்கள் காவல்துறை 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், In case you've forgotten, காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோயம்புத்தூர்
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image2
Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image3
Now Playing
திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
Related Stories
Recommended image1
இரவு 11 முதல் மாறி மாறி அதிகாலை 3.30 மணி வரை! கோவையில் கல்லூரி மாணவி விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி
Recommended image2
பாதிக்கப்பட்ட பெண் மயக்க நிலையில் இருக்காங்க! எப்படி குற்றவாளியை கைது செய்தீர்கள்! எதுக்கு போட்டோவை காட்டல! அதிமுக கேள்வி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved