"ஆளுநர் தேவையில்லை", "தமிழகத்தில் இரு மொழி கொள்கை" த.வெ.க-வின் செயல்திட்டம் அறிவிப்பு!
Principles of TVK : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநில மாநாடு இன்று விக்ரவாண்டியில் கோலாகலமாக நடந்து வருகின்றது.
Vijay Maanadu
தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்பொழுது நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இந்த மாநாட்டில் தற்பொழுது கலந்து கொண்டுள்ளதாக காவல்துறையின் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையே தமிழக வெற்றிக்கழக தொண்டர்களால் நிரம்பியுள்ள நிலையில், அதற்கு ஏற்றார் போல போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருக்கிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; உறுதி மொழியுடன் துவங்கிய த.வெ.க மாநாடு - நேரலை இதோ!
Politician Vijay
இன்று மாலை சுமார் நான்கரை மணிக்கு மேல் இந்த விழா தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலையில் இருந்தே அங்கு அதிக அளவிலான தொண்டர்கள் கூடிய நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே கட்சியின் மாநில மாநாடு துவங்கப்பட்டிருக்கிறது. மாநாடு துவங்கியதும் அங்கு அமைக்கப்பட்ட 800 மீட்டர் ராம்ப்வாக் மேடையில் தளபதி விஜய் நடந்து சென்று தனது ரசிகர்களுக்கு கட்சியை தொண்டர்களுக்கு கைது அசைத்து செய்து உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியை ரிமோட் மூலம் அவர் ஏற்றி வைத்தார்.
vijay political meeting
அதன் பிறகு கட்சியின் கொள்கை பாடல் ஒளிபரப்பப்பட்டது, அதன் பிறகு கட்சியின் கொள்கையும், செயல் திட்டமும் தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வெளியான அறிவிப்பின்படி த.வெ.க கட்சியின் செயல்திட்டம் குறித்து பார்க்கலாம்...
மாவட்டம் தோறும் காமராஜர் மாதிரி அரசு பள்ளி ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை.
அறிவியலுக்கு எதிரான சிந்தனைகள் எப்போதும் நிராகரிக்கப்படும்.
மதுரையில் தலைமைச் செயலக கிளை உருவாக்கப்படும்.
மது போதை இல்லாத தமிழகத்தை படைப்போம்.
சாதி, மத, நிறம், மொழி, இனம், பாலின பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.
மத நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்கள் சமமாக பார்க்கப்பட வேண்டும்.
வர்ணாஸ்ர கோட்பாடு எந்த வகையில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்.
அரசு நிர்வாகம் எப்பொழுதும் முற்போக்கு சிந்தனையுடன் இருக்க வேண்டும்.... உள்ளிட்ட பல விஷயங்கள் த.வெ.க கட்சியின் செயல்திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TVK Maanadu
கட்சியின் கொள்கைகளும், செயல் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது தாய் தந்தையர்களிடம் ஆசி பெற்று இந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டின் சிறப்புரையை ஆற்ற தொடங்கி இருக்கிறார் தளபதி விஜய். குழந்தை மற்றும் தாயிடையே உள்ள பாசத்தை எடுத்துக்காட்டி தன்னுடைய உரையை அவர் தொடங்கி இருக்கிறார்.
800 மீ தூரம் வைக்கபட்ட மேடையில் நடந்து சென்று ரசிகர்கள் கொடுத்த கட்சி துண்டை அணிந்து கொண்ட தளபதி!