MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மக்களே உஷார்! இந்த 4 நாட்கள் தப்பி தவறி கூட வெளியே போயிடாதீங்க! வெயில் பொளந்து கட்டப்போகுதாம்!

மக்களே உஷார்! இந்த 4 நாட்கள் தப்பி தவறி கூட வெளியே போயிடாதீங்க! வெயில் பொளந்து கட்டப்போகுதாம்!

தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 28 வரை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 25 2025, 11:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெப்​பநிலை அதி​கரிக்கும்
Image Credit : our own

வெப்​பநிலை அதி​கரிக்கும்

தமிழகத்தில் கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட வட மற்றும் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் வெயில் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்​கத்​தை​விட 2 முதல் 3 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை வெப்​பநிலை அதி​கரிக்க வாய்ப்​பு உள்​ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

25
சென்னை வானிலை மையம்
Image Credit : our own

சென்னை வானிலை மையம்

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் ஆகஸ்ட் 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
என்ன நடிப்புடா சாமி! இது அப்பட்டமான பொய்! திமுகவின் முகத்திரையை கிழிக்கும் அன்புமணி!
Related image2
ஆசிரியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இனி அவ்வளவுதான்! செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!
35
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
Image Credit : our own

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று முதல் 28 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

45
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
Image Credit : our own

அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 .முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை முதல் 28 வரை; தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2.முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என கணித்துள்ளது.

55
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை நிலவரம்
Image Credit : Google

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36°செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
வெப்ப அலை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image2
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Recommended image3
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.. புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்..! முதல்வர் பெருமிதம்
Related Stories
Recommended image1
என்ன நடிப்புடா சாமி! இது அப்பட்டமான பொய்! திமுகவின் முகத்திரையை கிழிக்கும் அன்புமணி!
Recommended image2
ஆசிரியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இனி அவ்வளவுதான்! செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved