- Home
- Tamil Nadu News
- Teacher : ஆசிரியர்களே ரெடியா.! காலிப்பணியிடம் நிரப்ப போறாங்க- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
Teacher : ஆசிரியர்களே ரெடியா.! காலிப்பணியிடம் நிரப்ப போறாங்க- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் ஜூன் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆசிரியர்கள் பங்கு
மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர்களின் கல்வி, உளவியல், மற்றும் ஒழுக்க வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்றனர். ஆசிரியர்கள் பாடங்களை எளிமையாகவும், ஆர்வமூட்டும் வகையிலும் கற்பிக்கின்றனர். தனிப்பட்ட கவனம் செலுத்தி மாணவர்களின் பலவீனங்களை அடையாளம் கண்டு மேம்படுத்த உதவுகின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நேர்மை, பொறுப்பு, மரியாதை போன்ற மதிப்புகளை கற்றுத்தருகின்றனர்.
இது மாணவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்க உதவுகிறது. எனவே மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமாக ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் கலைஞர்களாக இருக்கின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு, அறிவு, மற்றும் அன்பு மாணவர்களை கல்வியிலும் வாழ்க்கையிலும் முன்னேற வைக்கிறது.
ஆசிரியர்கள் காலிப்பணியிடம்
எனவே பள்ளிகளில் மாணவர்கள் திறமையாக செயல்பட ஆசிரியர்கள் தேவை. ஆனால் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 20,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், 4,372 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது வந்து கொண்டுள்ளது.
மேலும் 3,192 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக பணி ஆணைகள் வழங்கப்படவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது. நிதி நெருக்கடி ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆசிரியர் நியமனங்கள் தாமதமாவதால் மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கிறது என்றும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய கோரிக்கை
எனவே ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தகுதி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி ஆணைகள் வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
அந்த வகையில் கடந்த கல்வியாண்டில், சுமார் 14,019 காலிப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களால் நிரப்பப்பட்டது. 2025-ஆம் ஆண்டு ஜூன் 17 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ராமநாதபுரத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம்
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
5 பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு அருகிலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பதாரர்கள் தகுந்த கல்வித் தகுதியுடன் இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆக இருக்க வேண்டும். ஊதியமாக இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000 வழங்கப்படும். மாதத் தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள் உடனுடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், 2025 ஜூன் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் கலோன் வெளியிட்டுள்ளார்.