MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 'குடி'மகன்களுக்கு ஷாக்.. இனி டாஸ்மாக்கில் ஒரு நபருக்கு இவ்வளவு சரக்கு தான் லிமிட்.. அதிரடி அறிவிப்பு!

'குடி'மகன்களுக்கு ஷாக்.. இனி டாஸ்மாக்கில் ஒரு நபருக்கு இவ்வளவு சரக்கு தான் லிமிட்.. அதிரடி அறிவிப்பு!

TASMAC New Limits: மதுபிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்விதமாக டாஸ்மாக் கடைகளில் தனி நபர் மது விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Mar 24 2026, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 தமிழகத்தில் அதிகரித்த டாஸ்மாக் கடைகள்
Image Credit : Asianet News

தமிழகத்தில் அதிகரித்த டாஸ்மாக் கடைகள்

தமிழ்நாடு முழுவதும் முக்கிய வீதிகள்தோறும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வரும் நிலையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பண்டிகை காலங்களில் மது விற்பனை கொடிகட்டி பறப்பதால், அரசுக்கு வருமானம் ஈட்டித் தருவதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. மது குடிப்பவர்களால் அவர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பமே பாதிக்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் திராவிட அரசுகள் செவிசாய்ப்பதில்லை.

24
தேர்தல் நடத்தை விதிகள்
Image Credit : Asianet News

தேர்தல் நடத்தை விதிகள்

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்களை கட்சிகள் விநியோகம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்படும் மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

Related Articles

Related image1
மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
Related image2
2026ல் இனி எப்பொதெல்லாம் டாஸ்மாக் விடுமுறை.. முழு பட்டியல் இதோ.. 'குடி'மகன்களே நோட் பண்ணுங்க!
34
டாஸ்மாக்கில் மது விற்க கட்டுப்பாடு
Image Credit : our own

டாஸ்மாக்கில் மது விற்க கட்டுப்பாடு

இந்த நிலையில், தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 12 பீர் பாட்டில்கள் அல்லது 7.8 லிட்டர் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மது வகைகளை தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும். 

இதேபோல் வெளிநாட்டு மது வகைகளையும் தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும். இதற்கான விற்பனை ரசீதை அவர்களிடம் கொடுக்க வேண்டும் என அனைத்து டாஸ்மாக் கடைகளின் மேலாளர்கள், விற்பனையாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

44
கட்டுப்பாடுகள் ஏன்?
Image Credit : our own

கட்டுப்பாடுகள் ஏன்?

நான் ஏற்கெனவே சொன்னபடி தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை சோதனையின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்படும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆகவே அரசியல் கட்சி பிரமுகர்கள் டாஸ்மாக்கில் மொத்தமாக மது வகைகளை வாங்கி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் டாஸ்மாக் நிர்வாகம் மது விற்பனைக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டாஸ்மாக் கடை
டாஸ்மாக்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் யார் ஓட்டைப் பிரிப்பார்? அதிமுகவா? திமுகவா? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் சொன்ன அதிர்ச்சி தகவல்
Recommended image2
Now Playing
தமிழகத்தில் ஒரு பொய்யான போரை உருவாக்குகிறார் முதல்வர் ஸ்டாலின் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
Recommended image3
Now Playing
விஜய் வருகையால் குலுங்கியது திநகர்.! ஆடி தள்ளுபடி கூட்டத்தை மிஞ்சிய மக்கள் கூட்டம்.!
Related Stories
Recommended image1
மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
Recommended image2
2026ல் இனி எப்பொதெல்லாம் டாஸ்மாக் விடுமுறை.. முழு பட்டியல் இதோ.. 'குடி'மகன்களே நோட் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved