'குடி'மகன்களுக்கு ஜாக்பாட்.. புத்தாண்டு ஸ்பெஷல்.. டாஸ்மாக் சொன்ன ஹேப்பி நியூஸ்!
தீபாவளி, பொங்கள் போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக இருக்கும். பண்டிகை காலங்களில் வெளியாகும் ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களில் வசூலை விட டாஸ்மாக் வசூல் அதிகமாக இருக்கும்.

டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகம்
தமிழ்நாடு முழுவதும் முக்கிய வீதிகள்தோறும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வரும் நிலையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
அதுவும் தீபாவளி, பொங்கள் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக இருக்கும். பண்டிகை காலங்களில் வெளியாகும் ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களில் வசூலை விட டாஸ்மாக் வசூல் தொகை அதிகமாக இருக்கும்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மது பிரியர்கள் ரெடி
இந்த நிலையில், 2025ம் ஆண்டு முடிவடைந்து புத்தாண்டு 2026 இன்று நள்ளிரவு பிறக்க போகிறது. தமிழகம் முழுவதும் புத்தாண்டு களைகட்டும். அதுவும் மது குடிப்பவர்களை புத்தாண்டு வந்து விட்டால் கையில் பிடிக்க முடியாது. ஒரே கொண்டாட்டம் தான்.
புத்தாண்டையொட்டி இன்று (டிசம்பர் 31) மற்றும் நாளை (ஜனவரி 1) மது விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மட்டும் வழக்கமான விற்பனையை விட கூடுதலாக 100 கோடி ரூபாய் விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து மது வகைகளும் தயார் நிலை
இதனால் டாஸ்மாக் கடைகளில் அனைத்து வகையான பிராந்திகள், அனைத்து வகையான பீர்கள், அனைத்து வகையான ரம்கள் என மது வகைகள் அனைத்தையும் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மது பிரியர்கள் கேட்கும் அனைத்தும் மது வகைகளும் ஸ்டார்க் இருப்பு வைக்கும்படி கூறப்பட்டுள்ளது. நாளை புத்தாண்டு அடுத்த இரண்டு வாரத்தில் பொங்கல் பண்டிகை வருவதால் அதனையும் கருத்தில் கொண்டு கூடுதலாக மது வகைகளை இருப்பு வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களில் ஏற்பாடுகள் தீவிரம்
இதனால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி என முக்கிய நகரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வகைகள் குவிக்கப்பட்டுள்ளன. அதிக மது பிரியர்கள் ஒரே நேரத்தில் குவிந்தாலும் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் போதிய பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் உத்தரவு வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
