MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்.! தமிழக அரசு அதிரடி.! யாருக்கெல்லாம் கிடைக்கும்!

இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்.! தமிழக அரசு அதிரடி.! யாருக்கெல்லாம் கிடைக்கும்!

தமிழக அரசு 2,000 தொழிலாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தின் முதல் கட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 11 2026, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 எலக்ட்ரிக் வாகனங்கள்
Image Credit : Google

எலக்ட்ரிக் வாகனங்கள்

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் எரிபொருள் வாகனங்களில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு நாடுகளும் மாறி வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்களினால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், தொடக்கத்தில் அதன் வாங்கும் விலையானது சற்று அதிகமாக இருந்து வருகிறது. இதனால், மக்களிடையே எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகிறது.

24
 தமிழக அரசு
Image Credit : Google

தமிழக அரசு

இந்நிலையில் தமிழக அரசு 2018ம் ஆண்டு அம்மா இருசக்கர வாகன திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ஸ்கூட்டர் வாங்குவதற்கு ரூபாய் 25,000 ரொக்கம் அல்லது 50% மானியம் வழங்கப்பட்டது. பலரும் இந்த திட்டத்தில் பயனடைந்து வந்த நிலையில் 2021ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
கட்சியில் இணைந்த 63 நாட்களில்.. விஜயின் முன்னாள் மேலாளருக்கு முக்கிய பதவியை தூக்கிக் கொடுத்த ஸ்டாலின்
Related image2
பனி குறைய போகுது.! மழையின் ஆட்டம் தொடங்கப்போகுது! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!
34
இ-ஸ்கூட்டர் 20,000 மானியம்
Image Credit : our own

இ-ஸ்கூட்டர் 20,000 மானியம்

அதாவது 2000 ஊழியர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி, ஒரு தொழிலாளர்களுக்கு 20,000 மானியம் என்ற அடிப்படையில் மொத்தம் 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நல வாரியத்தின் அனுமதி பெற்று விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்த அடுத்தடுத்த அறிவிப்பின் மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.

44
கிக் தொழிலாளர்கள்
Image Credit : Google

கிக் தொழிலாளர்கள்

அதேபோல் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் 2,000 தொழிலாளர்களுக்கு புதிய e-Scooter வாங்கும் செலவினத்தில் ரூ.20,000 மானியமாக வழங்கும் புதிய திட்டம் 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 100 தொழிலாளர்களுக்கு புதிய e-Scooter வாங்க மானியம் வழங்கும் திட்டத்தினை கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உருளி வண்டிகள்
தமிழ்நாடு அரசு
உணவு

Latest Videos
Recommended Stories
Recommended image1
கனிமொழி ஏரியாவில் மூக்கை நுழைத்த சபரீசன்..! திமுக குடும்பத்தில் உச்சகட்ட மோதல்..!
Recommended image2
முதல்வரின் கார் முற்றுகையிட முயற்சி..! பொதுப்பணித்துறை ஊழியர்களை அடித்து துவைத்த போலீஸ்..
Recommended image3
பனி குறைய போகுது.! மழையின் ஆட்டம் தொடங்கப்போகுது! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!
Related Stories
Recommended image1
கட்சியில் இணைந்த 63 நாட்களில்.. விஜயின் முன்னாள் மேலாளருக்கு முக்கிய பதவியை தூக்கிக் கொடுத்த ஸ்டாலின்
Recommended image2
பனி குறைய போகுது.! மழையின் ஆட்டம் தொடங்கப்போகுது! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved