MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! யூடியூப்பில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா?

தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! யூடியூப்பில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா?

Own Youtube Channel Training Programme: தமிழக அரசு வேலை தேடும் இளைஞர்களுக்காக யூடியூப் சேனல் தொடங்க பயிற்சி அளிக்கிறது. ஏப்ரல் 22 முதல் 24 வரை சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சிக்கு முன்பதிவு அவசியம்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 10 2025, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Youth Employment

Youth Employment

வேலை தேடும் இளைஞர்கள்

ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்து வேலை தேடி அலைகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு உதவித்தொகை உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்பினை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
tamilnadu government

tamilnadu government

தமிழக அரசு

இந்நிலையில் சொந்தமாக தொழில் செய்ய திட்டமிடுபவர்களுக்காக சுய தொழில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.  சமீப காலங்களில் யூடியூப் சேனல் தொடங்கி அதன்மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இதனை கருத்தில் கொண்டு புதிய யூடியூப் சேனல் தொடங்க விரும்புபவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.  

36
Youtube Channel

Youtube Channel

யூடியூப் சேனல் தொடங்குவதற்கான பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது ஏப்ரல் 22 முதல் 24ம் தேதி வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்நிறுவன வளாகத்தில்
நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: வானமே எல்லை! தமிழக அரசின் சூப்பர் சான்ஸ் - இலவச ட்ரோன் பயிற்சி! உடனே விண்ணப்பிக்கவும்!

46
Youtube Channel training

Youtube Channel training

யூடியூப்பில் மார்க்கெட்டிங் செய்வது எப்படி.?
  
சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல் சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு - ஆன்லைன் மார்க்கெட்டிங் - டொமைன் பெயர் ஹோஸ்டிங் - இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் ஆகியவை தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. மற்றும் விதிகள். இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண், பெண், திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

56
Job vacancy

Job vacancy

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பயிற்சியில் பங்குப் பெறும் ஆண், பெண், திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இப்பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.  அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!

66
Own Youtube Channel training programme

Own Youtube Channel training programme

முன்பதிவு அவசியம்

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.9543773337 / 9360221280 முன்பதிவு அவசியம் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு
தமிழ்நாடு
வணிகம்
தமிழ்நாடு அரசு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved