பெண்களுக்கு குட்நியூஸ்.. கிரைண்டர் வாங்க 5000 ரூபாய்.! தமிழக அரசு சூப்பர் ஆஃபர்!
தமிழக அரசு வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மற்றும் ஆதரவற்ற மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வணிக ரீதியான உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5000 மானியம்.

பெண்களுக்கு சூப்பர் திட்டம்
தமிழகத்தில் மகளிர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்கள் சொந்தமாக முன்னேற வேண்டும், யாரையும் எதிர்பார்த்து இருக்க கூடாது என்பதற்காக ஒவ்வொரு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மகளிர் உரிமை தொகை, தையல் மிஷன், பெண்களுக்காக பிங்க் ஆட்டோ வாங்க ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. சொந்த தொழில் செய்ய மானிய கடன் உதவி திட்டங்களும் நடைமுறையில் உள்ளது.
தமிழக அரசு
இந்நிலையில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் மூலம் உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கான மானியத் தொகையினை பெற விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பெண்கள்
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பெண்களின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
50 சதவீதம் மானியம்
அதன்படி நடப்பு 2025- 2026ம் நிதியாண்டுக்காக வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது அதன் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு முன்னுரிமை
குறிப்பாக கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 12ம் தேதிக்குள், ஈரோடு மாவட்ட அலுவலக வளாகத்தின் 6வது தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

