- Home
- Tamil Nadu News
- என்னது! மாநில தலைவர் ரேஸில் முதலிடத்தில் இருப்பது இவரா? அப்படினா நயினார் நாகேந்திரன்?
என்னது! மாநில தலைவர் ரேஸில் முதலிடத்தில் இருப்பது இவரா? அப்படினா நயினார் நாகேந்திரன்?
அதிமுகவுடன் கூட்டணி உறுதியான நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலை விலகியுள்ளார். மாநிலத்தலைவர் போட்டியில் யார் யார் என்பதை பார்ப்போம்.

Annamalai
அடுத்த தமிழக பாஜக மாநிலத்தலைவர் யார்?
மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என அண்ணாமலை அதிரடியாக அறிவித்திருந்தார். இந்நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர் சொன்னபடியே தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் படி பாஜக மாநில தலைவர் போட்டியில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை பெயர்கள் அடிப்பட்டது. ஆனாலும் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்து வந்ததால் இவர் தான் அடுத்த மாநிலத்தலைவர் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
tamilandu bjp president election
ரேஸில் முந்தும் ஆனந்தன் அய்யாசாமி
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பாஜக மாநிலத்தலைவர் ரேஸில் ஆனந்தன் அய்யாசாமியும், 2வது இடத்தில் நயினார் நாகேந்திரனும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்காசி பாஜக மாவட்ட செயலாளராக இருப்பவர்தான் ஆனந்தன் அய்யாசாமி. கூடுதலாக பாஜக மாநில ஸ்டார்ட் அப் செல் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். ஆனந்தன் அய்யாசாமி பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்புவுக்கு இவர் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் அமித்ஷா.! இபிஎஸ் முதல் குருமூர்த்தி வரை- இன்று யாரையெல்லாம் சந்திக்கிறார்.?
nainar nagendran
கால அளவை எட்டாத நயினார் நாகேந்திரன் ஆனந்தன் அய்யாசாமி
நயினார் நாகேந்திரன், ஆனந்த் அய்யாசாமி ஆகியோரின் பெயர் மாநில தலைவர் பதவி ரேஸில் அடிபட்டுக்கொண்டிருந்த நிலையில் மாநில துணைத் தலைவர் மற்றும் மாநில தேர்தல் அதிகாரி எம்.சக்ரவர்த்தி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள், அக்கட்சியில் குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தமிழக பாஜகவின் தற்போதைய தலைவர் அண்ணாமலையும், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து எம்.எல்.ஏவாக பதவி வகித்து வரும் நயினார் நாகேந்திரன் மற்றும் ஆனந்தன் அய்யாசாமி ஆகியோர் இந்த கால அளவை எட்டவில்லை.
இதையும் படிங்க:சென்னை வரும் அமித்ஷாவே திரும்பி போ.! கருப்பு கொடியோடு களம் இறங்கும் தமிழக காங்கிரஸ்
ananthan ayyasamy
பட்டியல் இனத்தை சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி
ஆனால் கட்சி வளர்ச்சியை கருதி விதியை தளர்த்த வழி இருப்பதால் இந்த இருவரில் ஒருவர் மாநில தலைவர் ஆகும் வாய்ப்பு உள்ளது. ஆனந்தன் அய்யாசாமி பட்டியல் இனத்தை சேர்ந்தவர். நயினார் நாகேந்திரன் தேவர் சமூகத்தை சேர்ந்தவர். அதிமுகவின் வாக்கு வங்கியாக அருந்ததியர், கவுண்டர், தேவர், முத்திரையர் சமூகம் உள்ளது. இதில் அருந்ததியர், கவுண்டர் சமூகங்களுக்கு வாய்ப்பு வழங்கிய நிலையில், பட்டியல் இனத்தவர் & தேவர் சமூகத்திற்கு சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மாநில தலைவர் பதவியும், முதல்வர் பதவிக்கான வேட்பாளருக்கும் இடையே ஒரு பாலம் தேவை. அந்த பாலமே இந்த தேர்தல். பாஜக மாநில தலைவர் பதவிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் 12ம் தேதி வெளியாகிறது.