- Home
- Tamil Nadu News
- விஜய்யே மகா கஞ்சன்.. செங்கோட்டையன் எட்டனா செலவு பண்ண மாட்டாரு.. மாநில கஞ்ச கூட்டணி.. போட்டு தாக்கும் பாண்டியன்
விஜய்யே மகா கஞ்சன்.. செங்கோட்டையன் எட்டனா செலவு பண்ண மாட்டாரு.. மாநில கஞ்ச கூட்டணி.. போட்டு தாக்கும் பாண்டியன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள நிலையில் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவெகவில் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சரும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்ற செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். செங்கோட்டையனுடன் சேர்த்து முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் இணைந்துள்ளனர்.
செங்கோட்டையனுக்கு மாற்றப்பட்ட விஜய்யின் பொறுப்பு
தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு விஜய் தலைமையில் செயல்பட்டு வந்த 28 பேர் கொண்ட மாநில நிர்வாக குழுவை ஒருங்கிணைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தவெக கூட்டணியில் ஓபிஎஸ்..?
இந்நிலையில் செங்கோட்டையனின் இணைப்பு தொடர்பாக விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “செங்கோட்டையன் தனி நபராக செல்லவில்லை. அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முன்னாள் தலைவர்களையும் அழைத்துச் செல்வார். மேலும் டிசம்பர் 15ம் தேதிக்குள் தன்னை கட்சியில் இணையக்க வேண்டும் இல்லையென்றால் தனி கட்சி தொடங்குவேன் என பன்னீர்செல்வம் மிரட்டல் விடுத்துள்ளார்.
மகா கஞ்ச கூட்டணி..
பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கவில்லை என்றால் அவர் தனி கட்சி தொடங்கி தவெகவுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறார். சிந்தித்து பாருங்கள்.. விஜய் ஒரு மகா கஞ்சன். ஒரு ரூபா செலவு பண்ண மாட்டாரு, செங்கோட்டையன் எட்டனா செலவு பண்ண மாட்டாரு, ஓபிஎஸ் அதுக்கும் மேல இவங்க எல்லாம் சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டா எப்படி இருக்கும். மகா கஞ்ச கூட்டணி என்று விமர்சித்துள்ளது இணையத்தில் வைராகி வருகிறது.
#Sengottaiyan 😅 pic.twitter.com/D4G45vETBN
— விழுப்புரம் கிருபா (@Admk_Kiruba) November 27, 2025

