- Home
- Tamil Nadu News
- ஒரு கிலோ இவ்வளவு தானா.! கொட்டிக்கிடக்கும் தக்காளி- கூடை நிறைய அள்ளிச்செல்லும் பொதுமக்கள்
ஒரு கிலோ இவ்வளவு தானா.! கொட்டிக்கிடக்கும் தக்காளி- கூடை நிறைய அள்ளிச்செல்லும் பொதுமக்கள்
தக்காளி, வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையில் மூட்டை மூட்டையாக கொட்டிக்கிடக்கிறது. பொதுமக்களும் கூடை நிறைய வாங்கி செல்கின்றனர்.

Tomato And Onion Price Today : சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது காய்கறிகள் தான், அந்த வகையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மற்ற காய்கறிகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வாங்குவதை விட தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு தான் அதிகளவில் வாங்குவார்கள், ஏனென்றால் இந்த இரண்டு காய்கறிகள் இல்லாமல் சமைப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. எனவே தக்காளி மற்றும் வெங்காயம் விலை உயர்ந்தால் இல்லத்தரசிகள் நிலைமை பரிதாபம்தான்.
உச்சத்தில் இருந்து சரிந்த காய்களி விலை
அதன் படி கடந்த சில மாதங்களுக்கு உச்சத்தில் இருந்த தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை தற்போது சரசரவென சரிந்துள்ளது. தக்காளி விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ 4 முதல் 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தக்காளியை பறித்து சந்தையில் விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை விட அதற்கான செலவு அதிகமாக இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியில் விடும் நிலை உள்ளது.
தக்காளி வெங்காயம் விலை என்ன.?
இதே போல வெங்காயத்தின் வரத்தும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை கடந்த நிலையில் தற்போது ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ள அதே நேரத்தில் இது தான் நல்ல சான்ஸ் என பொதுமக்கள் பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.
பச்சை காய்கறிகள் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கேரட் விலை என்ன.?
குடைமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இஞ்சி விலை என்ன.?
முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.