- Home
- Tamil Nadu News
- பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
Tamil Nadu School Holiday: தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள்
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி தொடங்கியது.
அதே வேளையில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (15ம் தேதி) அரையாண்டு தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்த தேர்வுகள் டிசம்பர் 23ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன.
9 நாட்கள் விடுமுறை; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் புத்தாண்டு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படும்? என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்
அதாவது அரையாண்டு தேர்வு முடிந்த மறுநாள் டிசம்பர் 24ம் தேதி (புதன்கிழமை) முதல் ஜனவரி 1ம் தேதி (வியாழக்கிழமை) வரை என 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி 2ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொத்தாக 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் துள்ளிக்குதித்து கொண்டாடி வருகின்றனர்.

