பள்ளி மாணவர்களுக்கு ஷாக்.! தேர்வு திடீர் ஒத்திவைப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29ம் தேதி நடைபெறவிருந்த இந்த தேர்வு மாணவர்களின் நலன் கருதி டிசம்பர் 6ம் தேதிக்கு மாற்றப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ஊரகத் திறனாய்வு தேர்வு
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.
கல்வி உதவித்தொகை
அதன்படி நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நவம்பர் 29ம் தேதி அதாவது நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களின் ஹால்டிக்கெட்கள் www.dge.tn.gov.in எனும் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஹால் டிக்கெட்
ஹால் டிக்கெட்டில் தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஹால் டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பமிட வேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் டிட்வா' புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம்
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு மாணவர்களின் நலன் கருதி டிசம்பர் 6ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

