- Home
- Tamil Nadu News
- ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு.. இன்னும் 2 நாளில் இதை செய்யலைனா கார்டு ரத்தாகுமா? முழு விவரம்!
ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு.. இன்னும் 2 நாளில் இதை செய்யலைனா கார்டு ரத்தாகுமா? முழு விவரம்!
TN Ration Card: 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின்படி நீங்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அருகிலுள்ள ரேஷன் கடைகளில் பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நியாயவிலைக் கடைகள்
தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகள் எனப்படும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நடுத்தர மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களே வாழ்வாதாரமாக உள்ளது. மேலும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு
முறைகேடுகளை தடுக்கவும், தடையின்றி ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதற்கு ஏதுவாகவும் ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்பத்தில் யாராவது ஒருவர் ரேஷன் கடைகளில் தங்களது கை ரேகையை பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இன்னும் சிலர் ரேஷன் கடைகளில் கை ரேகை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள், இன்னும் 2 நாட்களுக்குள் அதாவது மார்ச் 25ம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்
ஆகவே ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் உடனடியாக தங்களது அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து குடும்ப அட்டைகளிலும் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது விரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் இருந்து பெயர்கள் நீக்கப்படலாம்
மார்ச் 25ம் தேதிக்குள் கைரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின்படி நீங்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அருகிலுள்ள ரேஷன் கடைகளில் பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

