ஜனவரி முதல் ஓய்வூதியம் நிறுத்தம்.! யாருக்கெல்லாம் தெரியுமா.? தமிழ்நாடு அரசு ஷாக் அறிவிப்பு
மாதம், மாதம் பல கோடி பேர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் உரிய வகையில் சான்றிதழை சமர்பிக்காதவர்களின் ஓய்வூதியம் இந்த மாதம் முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
pension scheme
அரசு பணிக்காக போராடும் இளைஞர்கள்
ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் படிப்பை முடித்து வேலை தேடி உலகத்திற்கு வருகிறார்கள். அந்த வகையில் தனியார் துறையில் பல லட்சம் வேலைகள் குவிந்து கிடந்தாலும் அரசு பணிக்கே முக்கியத்துவம் கொடுத்து இரவு பகலாக படித்து தேர்வு எழுதுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக வேலை உத்தரவாதம், விடுமுறை, போனஸ், பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் என பல சலுகைகள் கிடைப்பது தான். இந்த நிலையில் புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
அரசு பணி சலுகைகள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் அரசு பணியில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் நிறுத்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்காதவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெற சிக்கல்
இதன் படி தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், கருணை ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை வருடா வருடம் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 92000 பேர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கருணை ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். கடந்த ஜீலை 2024 மாதம் முதல் டிசம்பர் 2024 மாதம் வரையில் 58000 ஓய்வூதியதாரர்கள் 2024-ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சான்றிதழை சமர்பித்துள்ளனர்.
TNEB
ஓய்வூதியம் கிடைக்காது
மீதமுள்ள 34000 ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், கருணை ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்த தகவல்கள் இவ்வலுவலகத்தில் பெறப்படவில்லை என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கூறியுள்ளது. எனவே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், கருணை ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் ஜனவரி மாதம் முதல் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது.