- Home
- Tamil Nadu News
- தொடர்ந்து வன்மமாக பேசும் பொன்முடி; அமைச்சர் பதவியும் பறிப்பா.? வெளியாகுப்போகும் அறிவிப்பு!!
தொடர்ந்து வன்மமாக பேசும் பொன்முடி; அமைச்சர் பதவியும் பறிப்பா.? வெளியாகுப்போகும் அறிவிப்பு!!
திமுக தலைவர் பொன்முடி சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மகளிர் இலவச பேருந்து பயணம், ஊராட்சி மன்ற தலைவர் குறித்த சர்ச்சை, மற்றும் சமய குறியீடுகள் குறித்த பேச்சு ஆகியவை கண்டனத்திற்கு உள்ளாகின.

Minister Ponmudi controversial speech :
Ponmudi vs DMK
திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் பொன்முடி, ஆனால் கடந்த சில வருடங்களாகவே அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை கூறி வம்பில் மாட்டிக்கொள்வார். அந்த வகையில் தமிழக அரசின் முக்கிய திட்டமான மகளிர் விடியல் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை கொச்சையாக விமர்சித்த அமைச்சர் பொன்முடி ஓசி டிக்கெட் என கூறியிருந்தார். அடுத்ததாக அரசு விழாவின் போது ஊராட்சி மன்ற தலைவியை அவரது ஜாதியை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
Ponmudi controversial speech
பொன்முடியும் சர்ச்சை பேச்சும்
கோரிக்கை தொடர்பாக பெண்கள் அமைச்சர் பொன்முடியிடம் மனு கொடுக்க சென்ற போது தனக்கு ஓட்டு போட்டீங்களா.? என கோபமாக பேசியது, இது போன்ற தொடர் சர்ச்சையில் சிக்கியவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக தலைவர் ஸ்டாலின் அமைதி காத்து வந்தார். அதே நேரம் பொன்முடிக்கு பல முறை ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
Ponmudi removal
கட்சி பதவியில் இருந்து நீக்கம்
இந்த நிலையில் நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி,சைவ, வைணவ சமயங்களின் குறியீடுகளை தவறாக ஒப்பீட்டு பேசியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெண்கள் மத்தியில் ஆபாசமாக பேசிய பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இதனையடுத்து தான் திமுக நிர்வாகி கனிமொழி உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பொன்முடியின் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
controversial speech
காலியாகும் பொன்முடியின் அமைச்சர் பதவி
இதனையடுத்து அமைச்சர் பொறுப்பில் இருந்தும் பொன்முடி நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பொன்முடி நீக்கம் தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அமைச்சர என்ற ஒரு வார்த்தை கூன பயன்படுத்தப்படவில்லை. எனவே பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.