- Home
- Tamil Nadu News
- மகளிர் உரிமைத் தொகை! பெண்களுக்கு வரப்போகும் குஷியான அறிவிப்பு! தமிழக அரசின் சர்ப்ரைஸ்!
மகளிர் உரிமைத் தொகை! பெண்களுக்கு வரப்போகும் குஷியான அறிவிப்பு! தமிழக அரசின் சர்ப்ரைஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த பெண்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக அரசு குஷியான அறிவிப்பை வெளியிட உள்ளது.

Tamil Nadu Magalir Urimai Thogai Scheme Update 2025
தமிழக அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் என்ற பெயரில் குடும்ப அட்டை வைத்துள்ள, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குறிப்பிட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோரைத் தவிர மற்ற குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை
அண்மையில் சில மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறிப்பிட்ட ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதியான பெண்கள் இந்த திட்டத்தில் தகுதியானவர்கள் என்றும் 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும் 19,487 இலங்கைத் தமிழர்களும் இத்திட்டத்தில் இணையலாம் எனவும் தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தனர்.
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிய விண்ணப்பங்கள்
புதிதாக விண்ணப்பித்தவரளின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதமாக மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. குறிப்பாக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களும் நிலுவையில் உள்ளன. விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த காலக்கெடு நாளையுடன் (ஆகஸ்ட் 28ம் தேதி) முடிவடைகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் தகவல் வரலாம்
ஆகவே முதன் முதலில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் குறுஞ்செய்தி மூலம் பதில் அனுப்பப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை தொடர்பான தகவல்களை விண்ணப்பதாரர்கள் https://kmut.tn.gov.in/என்ற இணையதளத்தில் நேரடியாக அறிந்து கொள்ளலாம். “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டும் 15 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.