MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • CM Vijay : எம்.எல்.ஏ.க்களுக்கு கார்... மாதம் ரூ.75,000 வாகனப்படி - சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

CM Vijay : எம்.எல்.ஏ.க்களுக்கு கார்... மாதம் ரூ.75,000 வாகனப்படி - சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

New Car for Tamil Nadu MLA's : தமிழ்நாடு எம்.எல்.ஏ-க்கள் இனி தொகுதிப் பணிகளுக்காக சுலபமாக பயணிக்க, அனைவருக்கும் புதிய கார்கள் வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 19 2026, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
New Car for Tamil Nadu MLAs
Image Credit : facebook.com/CMOTamilnadu

New Car for Tamil Nadu MLAs

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ளும் வகையில், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், வாகனத்தை இயக்குதல் மற்றும் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாகவும், உதவியாளர் ஒருவரை நியமித்துக் கொள்ள ரூ.25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று 110-வது விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

Maternity Leave: 3-வது குழந்தைக்கும் 1 வருஷ லீவு! அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையைத் தொடர்ந்து அறிவிப்பு
Image Credit : Asianet News

எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையைத் தொடர்ந்து அறிவிப்பு

கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி சட்டப்பேரவையில் பேசும்போது, பல சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொந்தமாக வாகனம் இல்லாததால் தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்கள் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், உறுப்பினர்களின் அடிப்படைத் தேவைகளை அரசு பூர்த்தி செய்வதன் மூலம், அவர்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் மக்கள் பணியாற்றுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

35
தொகுதி பணிகளுக்கு அரசு வாகனம்
Image Credit : Asianet News

தொகுதி பணிகளுக்கு அரசு வாகனம்

பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இல்லாத உறுப்பினர்களும், முதல் முறையாக சட்டமன்றத்துக்குத் தேர்வாகியுள்ள உறுப்பினர்களும் தங்களது மக்கள் பணியை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்தார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் அவர்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கும் எளிதாகச் சென்று மக்களை நேரடியாக சந்திக்க முடியும் என்றும் அவர் கூறினார். வாகன வசதி கிடைப்பதால் பயணத்திற்காக பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை குறையும். இதன் மூலம் உறுப்பினர்கள் சுயமாகவும், எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காமலும் தொகுதி பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

45
மாதம் ரூ.75,000 வாகனப்படி
Image Credit : X

மாதம் ரூ.75,000 வாகனப்படி

அரசு வழங்கும் வாகனத்திற்கான ஓட்டுநர் சம்பளம், எரிபொருள், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளைச் சமாளிக்கும் வகையில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனம் தொடர்பான அத்தியாவசிய செலவுகளை உறுப்பினர்கள் மேற்கொள்ள முடியும். தொகுதி சார்ந்த பணிகள் மற்றும் அலுவலக நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளர் ஒருவர் தேவைப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார். இதற்காக ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ளும் வகையில், மாதந்தோறும் ரூ.25,000 உதவியாளர் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனப்படி மற்றும் உதவியாளர் படியாக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு மாதந்தோறும் மொத்தம் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

55
சட்டத் திருத்தம் செய்து அரசாணை
Image Credit : ANI

சட்டத் திருத்தம் செய்து அரசாணை

இந்த புதிய நடைமுறையை செயல்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன்பின்னர் உரிய அரசாணைகள் வெளியிடப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மூலம் சட்டமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பொருளாதாரச் சுமை குறைவதுடன், அவர்கள் மக்களை நேரடியாக அணுகி தொகுதி பிரச்சினைகளை விரைவாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நன்றி தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்களின் தொகுதி பணிகளுக்கு இந்த அறிவிப்பு உதவியாக இருக்கும் எனவும் அவர் பாராட்டினார்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Uzhavar Santhai Vegetable Price Today: கூடைகளில் குவிந்து கிடக்கும் காய்கறிகள்.! பை பையாய் அள்ளிச்செல்லும் இல்லத்தரிகள்.!
Recommended image2
2027 Holidays : 2027-ல் எத்தனை அரசு விடுமுறைகள்? லாங் வீக்கெண்ட் எத்தனை? பொங்கல் முதல் தீபாவளி வரை முழு விவரம்!
Recommended image3
சென்னை டூ திருச்சி இனி 3.30 மணி நேரத்தில் போகலாம்.. 130 கிமீ வேகத்தில் ரயில்கள்.. மாஸ் அப்டேட்!
Related Stories
Recommended image1
CM Vijay : முதல்வராக கோட்டையில் கொடியேற்றிய விஜய்... சுதந்திர தின விழாவில் என்ன பேசினார் தளபதி?
Recommended image2
திமுக-விடம் மன்னிப்பு கேட்ட விஜய்! தவெக அமைச்சர் செய்த தவறு! நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved