- Home
- Tamil Nadu News
- மகளிர் உரிமைத் தொகை.. நீக்கப்பட்ட 50% பேர்..? கொளுத்திப்போட்ட திமுக.. அக்கவுண்ட் செக் பண்ணுங்க..
மகளிர் உரிமைத் தொகை.. நீக்கப்பட்ட 50% பேர்..? கொளுத்திப்போட்ட திமுக.. அக்கவுண்ட் செக் பண்ணுங்க..
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இரண்டாவதாக சேர்க்ப்பட்ட 17 லட்சம் பயனாளர்களில் 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த கருத்துக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை..
முந்தைய திமுக அரசு சார்பில் தொடங்கப்பட்ட சிறப்பான திட்டங்களில் ஒன்றாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பட்டு வருகிறது. தவெக அரசு பொறுப்பேற்ற பின்னரும், திட்டத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யாமல் அதனைத் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் நிதி அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
படிப்படியாக முடக்க திட்டம்..?
மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைப் படிப்படியாக முடக்குவதற்கு அரசு திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஆக உரிமைத்தொகையை உயர்த்தி வழங்கப்போவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற்று வரும் தகுதியுள்ள பெண்களுக்குக்கூட எந்தக் காரணமுமின்றி அந்தத் தொகையை நிறுத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாகும்.
தமிழக அரசு விளக்க வேண்டும்..
எனவே, பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் வழங்க வேண்டிய ரூ.1,000 உரிமைத்தொகையையாவது தொடர்ந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். உரியவர்களுக்கான தொகை நிறுத்தப்பட்டிருப்பின் அதற்கான காரணத்தையும் அரசு உடனடியாக விளக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழக அரசின் பரபரப்பு விளக்கம்..
இந்த நிலையில் தமிழக அரசு இது தொடர்பாக தெரிவித்துள்ள விளக்கத்தின் படி. “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட 17 லட்சம் பேரில் 50 சதவீதம் பேர் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானதாகும். 206 நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகை சுமார் 1.29 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகள் இறப்பு, திட்டத்தில் இருந்து தாங்களாகவே விலகுவதாக தெரிவித்தாலோ அத்தகைய விவரங்கள் மட்டும் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படுதாக” சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.











