நெல் கொள்முதல்... ஷாக்காகி நின்ற விவசாயிகள்.! குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு
தமிழ்நாட்டில் கே.எம்.எஸ் 2025-2026 பருவத்திற்கான நெல் கொள்முதல் பணி தடையின்றி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மண்டலங்களில் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதாக வெளியான செய்திக்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நெல் கொள்முதல்
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் மூலம் 01.10.2002 முதல் நெல் கொள்முதல் பணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது குறித்தும், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான வழிமுறை மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை பாதுகாப்பாக சேமிப்பது குறித்தும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் அரசாணை நிலை எண்.60. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நாள் 16.07.2021-ன் படி வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
கண்காணிக்க அரசு அதிகாரிகள் நியமனம்
அரசாணையின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிகள் குறித்து தொடர்ந்து கண்காணித்திடவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கீழ்கண்ட அலுவலர்கள் அடங்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
1. இணை இயக்குநர் (விவசாயம்),
2.கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர்.
3.முதுநிலை / மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
4.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்).
5.விவசாயப் பிரதிநிதிகள் இருவர்.
நெல் கொள்முதல் நிலையம்
கண்காணிப்பு குழுவானது நெல் கொள்முதல் பணிகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து நெல் கொள்முதல் பணிகள் சிறப்பாக நடைபெற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நடப்பு கே.எம்.எஸ் 2025-2026 ஆம் பருவம் 01.09.2025 முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த கொள்முதல் பருவத்தில் 22.09.2025 வரையிலான காலங்களில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மண்டலங்களில் கீழ் கண்டவாறு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையம் மூடலா.?
திருவள்ளூர் மண்டலத்தில் திறக்கப்பட்ட கொள்முதல் 62 மண்டலங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்ட அளவு 17501.520 மெட்ரிக் டன், விவசாயிகளின் எண்ணிக்கை 2255 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல காஞ்சிபுரத்தில் திறக்கப்பட்ட 75 மண்டலங்களில் நெல் கொளுமுதல் செய்யப்பட்ட அளவு 24605.480 மெட்ரிக் டன் என கூறப்பட்டுள்ளது.
பயன்அடைந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 3620 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் உள்ள 59 நெல் கொள்முதல் நிலையங்களில் 14578.400 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 2019 விவசாயிகள் பயன் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையின்றி செயல்படும் நெல் கொள்முதல் நிலையம்
இந்நிலையில் 23.09.2025 அன்று வெளியிடப்பட்ட நாளிதழ் செய்தி ஒன்றில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மண்டலங்களில் நெல் சாகுபடி செய்து அறுவடை பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேற்படி இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாயிகள் அவதி படுவதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட மண்டலங்களில் 01.09.2025 முதல் தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்பு கிட்டங்கி. வட்ட செயல்முறை கிடங்கு மற்றும் திறந்த வெளி சேமிப்பு நிலையங்களுக்கு இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் யாரும் கலக்கம் அடைய வேண்டாம் எனவும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி தொடர்ந்து சுமுகமாக நடைபெற்று வருகிறது தெரிவித்துக்கொள்கிறேன்.