அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம்! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!
அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு மாதத்தின் முதல் தேதியே சம்பளம் போட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Important government order regarding Anganwadi teachersதமிழ்நாட்டில் 2,381 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அங்கன்வாடிவாடி ஊழியர்கள் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி வருகின்றனர். இதில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், இதில் 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து பதவி உயர்வு பட்டியலில் காத்திருக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Anganwadi Teachers
இந்நிலையில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதத்தின் முதல் தேதியே சம்பளம் போட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ''2022-2023-ஆம் கல்வியாண்டு முதல் அரசு, ஊராட்சி ஒன்றிய, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்துக்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடா்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரூ.10,000ல் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு! அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த தமிழ்நாடு அரசு!
Tamilnadu Goverment
இந்த வகுப்புகளில் தற்காலிகமாக பணியாற்றும் மழலையா் பள்ளி ஆசிரியா்களுக்கான கோரிக்கைகள் விதிகளுக்கு உள்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அங்கன்வாடி மையத்தின் பணி நேரம் காலை 9 முதல் நண்பகல் 12.30 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியா்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலம் மின்னணு நிதி பரிமாற்ற (இசிஎஸ்) முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
Anganwadi, Tamilnadu
இந்த ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் இருக்கக் கூடாது. இவ்வாறு முதல் தேதியிலேயே ஊதியம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டக் கல்வி அலுவலா் ஆய்வு செய்ய வேண்டும்.
மழலையா் வகுப்புகளை கையாளும் தற்காலிக சிறப்பாசிரியா்கள் மாதம் முழுவதும் பணிபுரிந்த காலத்தைக் கணக்கிட்டு ஒரு நாள் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆசிரியா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து அவா்கள் எமிஸ் எண் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பில் அரசு பெண் ஊழியர்களுக்கு புதிய சலுகை! சட்டப்பேரவையில் 'மாஸ்' அறிவிப்பு!