- Home
- Tamil Nadu News
- ரூ.10,000ல் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு! அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த தமிழ்நாடு அரசு!
ரூ.10,000ல் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு! அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த தமிழ்நாடு அரசு!
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பண்டிகை கால முன்பணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

Tamil Nadu government employees' marriage advance increased: தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தொடர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கான பனபலன் இந்த ஆண்டே வழங்கப்படும். 01-10-2025 முதல் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பனப்பலன் பெறலாம்.அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
Tamilnadu Government Employee
திருமண முன்பணம் உயர்வு
இதில் அரசு ஊழியர்க்ள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருமண முன்பணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில், ''அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பில் அரசு பெண் ஊழியர்களுக்கு புதிய சலுகை! சட்டப்பேரவையில் 'மாஸ்' அறிவிப்பு!
Tamilnadu government
பண்டிகை கால முன்பணம் உயர்வு
திருமணம் முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது அரசு, ஊழியர்கள் ஆசிரியர்க்ள் இடையே பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு, அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி முன்பணம் உயர்வு ஆகியவையும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பெரிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், ''அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கெனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்'' என்றார்.
Tamilnadu School Education
கல்வி முன்பணம் எவ்வளவு?
தொடர்ந்து, ''அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்தக் கல்வி முன்பணம் உயர்வால் தங்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில விரும்பும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்'' என்றும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் அறிவிப்பு வெளியானது - முதல்வர் உத்தரவு!!