அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் அறிவிப்பு வெளியானது - முதல்வர் உத்தரவு!!
தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்றான ஈட்டிய விடுப்பு சரண் முறை நடப்ப ஆண்டே நடைமுறைக்கு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

MK Stalin Government Employees announcement
Mk Stalin: தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முன்னதாக கொரோனா காலகட்டத்தில் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெறுக்கடியை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டது.
Tamil Nadu Chief minister M K Stalin (File Photo/@mkstalin)
அரசு ஊழியர்களின் போராட்டம்
ஈட்டிய விடுப்பு சரண் முறையை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த பட்ஜெட் உரையின் போது 1 - 4 - 2026 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணபயன் பெறலாம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பை வெளியிட்டார்.
முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்
ஆனால், சரண் முறையை நடப்பு நிதியாண்டிலேயே அமல் படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் முதல்வர் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நடப்பு நிதியாண்டே அமல்
முதல்வரின் அறிவிப்புகளில் முக்கியமான ஒன்றான சரண் முறை நடப்பு நிதியாண்டே அமல் படுத்தப்படுகிறது. அதன்படி 15 நாட்கள் வரை அரசு ஊழியர்கள் வருகின்ற 1 - 10 - 2025 முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணபலனைப் பெறலாம் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.