- Home
- Tamil Nadu News
- மாணவர்களுக்கு குஷியோ குஷி..! 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- தமிழக அரசு அரசாணை வெளியீடு
மாணவர்களுக்கு குஷியோ குஷி..! 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-ன் படி, 2025-2026ஆம் கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வி தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025யை செயல்படுத்தும் விதமாக 2025-2026ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான அரசுப் பொதுத் தேர்வினை இரத்து செய்தல் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை மாற்றியமைத்தல் ஆணை வெளியிடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. அதில்,
2025-2026ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான அரசு பொதுத் தேர்வு இரத்து செய்யப்படுகிறது.
2025-2026 முதல் 11ஆம் வகுப்பில் பயிலும் இருந்த கல்வியாண்டு 2017-2018ஆம் கல்வியாண்டிற்கு முன்னர் மாணவர்களுக்கு நடைமுறையை பின்பற்றி தேர்வு நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது.
2025-2026ஆம் கல்வியாண்டில் இருந்து மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை மாற்றி, அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதிய பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை மட்டும் உள்ளடக்கிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.