- Home
- Tamil Nadu News
- ஜல்லிக்கட்டு ஆதரவு தீர்ப்பு கொடுத்தவர்தான் புதிய எஸ்ஐடி தலைவர்..! யார் இந்த அஜய் ரஸ்தோகி
ஜல்லிக்கட்டு ஆதரவு தீர்ப்பு கொடுத்தவர்தான் புதிய எஸ்ஐடி தலைவர்..! யார் இந்த அஜய் ரஸ்தோகி
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளது. இந்த சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் 41 பேர் பலி
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இது தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையை கரூர் போலீசார் மேற்கொண்ட நிலையில்,
சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு (SIT) அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தவெக, தமிழக போலீஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அதனை அதே போலீசார் விசாரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
இதனையடுத்து இன்று வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா தலைமையிலான அமர்வு கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில் SIT குழு அமைத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த குழுவில் தமிழக கேடர் IPS அதிகாரிகள் 2 பேரை அஜய் ரஸ்தோகி தேர்ந்தெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த அஜய் ரஸ்தோகி
இந்த நிலையில் யார் இந்த அஜய் ரஸ்தோகி என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக 2018 முதல் 2023 வரை பணியாற்றியவர். 2004 முதல் 2018 வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2018ல் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தனது பதவிக் காலத்தில், ரஸ்தோகி 506 அமர்வில் பங்கேற்று விசாரித்துள்ளார். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாகவும், திருமணத்தை மீறிய உறவுகளை குற்ற மற்றதாக்குதல், கருணைக் கொலை உரிமைக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியும் உள்ளார்.