- Home
- Tamil Nadu News
- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.! மாதம் 20ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.! மாதம் 20ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சி அளிக்கிறது. 45 நாட்கள் பயிற்சியுடன் தங்கும் வசதி, உணவு இலவசம். பயிற்சி முடித்தவர்களுக்கு ரூ.20,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பும் உண்டு.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு
ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் வேலை தேடி பல ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள். எனவே தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பல லட்சம் பேருக்கு சொந்த ஊரில் வேலையானது கிடைக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதே போல சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காகவும் பயிற்சி வழங்கி கடன் உதவி திட்டங்களையும் அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் பேக்கரி தொழில், வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறது.
அழகு கலை பயிற்சி
அந்த வகையில் அழகு கலை பயிற்சியானது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தற்போது அழகுக்கலை நிலையம் பல இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு மேக்அப் போடவே பல ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனவே கை நிறைய பணம் கொட்டும் தொழிலாக அழகு கலை உள்ளது. அந்த வகையில் அழகு கலை பயிற்சி தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுயதொழில் செய்ய ஆர்வம் உள்ளவரா நீங்கள்? உங்களுக்கான வாய்ப்பாக அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சியில் சேருங்கள் என அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
தகுதிகள் என்ன.?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும்.
8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவராக இருத்தல் வேண்டும்.
வயது : 18 முதல் 35
குடும்ப ஆண்டு வருமானம் < ரூ. 3 லட்சம்
விண்ணப்பிக்க : www.tahdco.com
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
பயிற்சிக் காலம் 45 நாட்கள்
தங்கும் வசதி, உணவு உட்பட செலவினங்களை தாட்கோ ஏற்கும்.
மேலும் சென்னையில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய NSDI (National Skill Development of India) அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு வழங்கி ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 10,000/- முதல் ரூ. 20,000/- வரை பெறலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.