- Home
- Tamil Nadu News
- விவசாயிகளுக்கு ரொம்ப கம்மி வட்டியில் பயிர் கடன்.! அசத்தலான தகவலை வெளியிட்ட தமிழக அரசு
விவசாயிகளுக்கு ரொம்ப கம்மி வட்டியில் பயிர் கடன்.! அசத்தலான தகவலை வெளியிட்ட தமிழக அரசு
தமிழகத்தில் 2024-25-ம் ஆண்டில் மொத்த சாகுபடி பரப்பு 1.50 கோடி ஏக்கராக உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பயிர் கடன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

விவசாயம் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 2019-20 நிதி ஆண்டில் 1.47 கோடி ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, 3.23 லட்சம் ஏக்கர் அதிகரித்து, 2024-25-ம் ஆண்டில் 1.50 கோடி ஏக்கராக உயர்ந்துள்ளது. எனவே விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய, மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதன் படி, 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு, டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 102 கோடி ஒதுக்கீடு,
முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம், ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு, இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்து.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பயிர் கடன் தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், விவசாயி கடன் அட்டை திட்டத்தின் கீழ் 7% வட்டியில் பயிர் சாகுபடிக்கான செலவுகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் குறுகிய கால பயிர்க் கடன்களை வழங்குகின்றன. இந்தக் கடன் இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி ரூ.2 இலட்சம் வரை பிணையம் இல்லாமலும் ரூ.3 இலட்சம் வரை பிணையம் பெற்றும் வழங்கப்படுகின்றன.
2023-24ஆம் ஆண்டில் ரூ.15,000 கோடி மைல்கல்லைத் தாண்டி ரூ.15,543 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டில் 18,20,340 விவசாயிகளுக்கு ரூ.16,410 கோடி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நடப்பு நிதி ஆண்டிலும் விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கான குறுகியகால வேளாண் கடன் தேவைக்காக வரும் 2025-26-ம் நிதி ஆண்டில் ரூ.17,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். வட்டி மானியத்துக்கு ரூ.853 கோடி, பயிர் கடன் தள்ளுபடிக்கு ரூ.1,477 கோடி ஒதுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.