இன்னும் ஒரே ஒரு வாரம் தான்.! மிஸ் பண்ணாதீங்க- பொது மக்களுக்கு தேதி குறித்த தமிழக அரசு
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பானது, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன், 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜனவரி 18, 2025 வரை 1.87 கோடி பேருக்கு வழங்கப்பட்டு, 85% பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையில் தமிழக அரசு பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Pongal festival
பொங்கல் கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும். உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும். நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடிடும் வகையில் தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
PONGAL GIFT
பொங்கல் பரிசு தொகுப்பு
அதன் படி இந்தாண்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 9ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
Pongal Celebration
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி
இதனையடுத்து ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் காலை மற்றும் மதிய வேலைகளில் இரு பிரிவாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் சுமார் 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
PONGAL GIFT
ஜனவரி 25வரை நீட்டிப்பு
அதன்படி, நேற்று (18.1.2025) வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 87 லட்சத்து 14 ஆயிரத்து 464 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 85 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 15 சதவிகித மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வருகின்ற 25.01.2025 அன்று வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.