MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Tamil Nadu News
  • கை நிறைய கொட்டும் பணம்.! பேக்கரி தொடங்க செம சான்ஸ்- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

கை நிறைய கொட்டும் பணம்.! பேக்கரி தொடங்க செம சான்ஸ்- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

Bakery business :  தினை வகை பேக்கரி பொருட்கள் தயாரிப்பு குறித்த 4-நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது. இந்த பயிற்சியில் பல்வேறு தினை பேக்கரி செய்முறைகள், சந்தைப்படுத்துதல் மற்றும் அரசு வழங்கும் கடன் உதவிகள் குறித்து விளக்கப்படும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Sep 19 2025, 03:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சொந்தமாக தொழில் தொடங்க பயிற்சி
Image Credit : our own

சொந்தமாக தொழில் தொடங்க பயிற்சி

தமிழக அரசு சார்பாக வேலை வாய்ப்பை உருவாக்கிட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் சொந்தமாக தொழில் தொடங்கவும் பயிற்சி வழங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 23.09.2025 முதல் 26.09.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தினை வகைகள் கொண்டு பேக்கரி
Image Credit : our own

தினை வகைகள் கொண்டு பேக்கரி

இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் ராகி நெய் குக்கீகள் சத்துமாவு குக்கீகள், கோதுமை தேங்காய் குக்கீகள், முத்து சோக்கோ தினை குக்கீகள் (கம்பு), கோடோ முந்திரி தினை குக்கீகள் (வரகு), சிறிய முந்திரி தினை குக்கீகள் (சாமை), சோளம் பிஸ்தா குக்கீகள் (சோலம்), பர்னார்ட் ஜீரா குக்கீகள் (குதிரைவாளி), மசாலா குக்கீகள், முழு கோதுமை ரொட்டி, பழ ரொட்டி, ராகி தினை ரொட்டி, பல தானிய ரொட்டி, ராகி சாக்கோ ரொட்டி, ராகி பிரவுனி, குதிரைவாலி தினை பிரவுனி, கருப்புகோவ்னி தினை பிரவுனி, பல தினை வால்நட் பிரவுணி, டேட்ஸ் தினை பிரவுனி, கோதுமை பிளம் கேக், ராகி சாக்லேட் கேக்,

Related Articles

Related image1
கொத்தாக வரும் விடுமுறை.! நெல்லை, கன்னியாகுமரிக்கு செல்ல சூப்பர் சான்ஸ்- தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
Related image2
அடி தூள்.! பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை.! யாருக்கெல்லாம் கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.
35
பேக்கரி பொருட்கள் தயாரிப்பது எப்படி.?
Image Credit : our own

பேக்கரி பொருட்கள் தயாரிப்பது எப்படி.?

ஜோவர் கேரட் கேக் (Cholam cake), ஃபாக்ஸ்டெயில் மற்றும் டேட்ஸ் கேக் (தினை), வாழைப்பழம் வால்நட் கேக், தினை வெல்லம் வெண்ணெய் கேக், முழு கோதுமை பீட்சா, முழு கோதுமை பூண்டு ரொட்டி, ராகி கருப்பு காடு கேக், பட்டர்கிரீம் ஃப்ரோஸ்டிங்குடன் தினை வெண்ணிலா கேக் வகைகள் எப்படி மேலும் தயாரிப்பு தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

45
பயிற்சி வகுப்பிற்கு அழைப்பு
Image Credit : our own

பயிற்சி வகுப்பிற்கு அழைப்பு

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். முதலில் வருவோர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

55
பயிற்சி- தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Image Credit : social media

பயிற்சி- தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 மற்றும் தொலைபேசி எண்கள் 8668102600 / 8072914694 /99436 85468. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் எனவும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கிருஷ்ணகிரி சிப்காட்டை குப்பைக் கிடங்காக மாற்றுவதா? - சௌமியா அன்புமணி
Recommended image2
Anbil Mahesh : ரூ.100 கோடி ஊழல் புகார் எதிரொலி... முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் திடீர் ரெய்டு
Recommended image3
Tomorrow Power Cut: நாளைக்கு பவர் கட்..உங்க ஊர் பெயர் இருக்கா? முழு லிஸ்ட்டையும் செக் பண்ணுங்க!
Related Stories
Recommended image1
கொத்தாக வரும் விடுமுறை.! நெல்லை, கன்னியாகுமரிக்கு செல்ல சூப்பர் சான்ஸ்- தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
Recommended image2
அடி தூள்.! பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை.! யாருக்கெல்லாம் கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved