MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TVK Vijay‌ Cabinet List: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்.. யார் யாருக்கு வாய்ப்பு! 23 பேர் கொண்ட பட்டியல் வெளியானது!

TVK Vijay‌ Cabinet List: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்.. யார் யாருக்கு வாய்ப்பு! 23 பேர் கொண்ட பட்டியல் வெளியானது!

TVK Vijay‌ Cabinet: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 21 தவெக மற்றும் 2 காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். 

2 Min read
Author : vinoth kumar
Published : May 21 2026, 09:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக வெற்றிக் கழகம்
Image Credit : Asianet News

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக முதல்வராக விஜய் மே 10ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஏ.கே.செங்கோட்டையன், வெங்கட ரமணன், சிடிஆர்.நிர்மல்குமார், ராஜ் மோகன், பிரபு, கீர்த்தனா, அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் 25-க்கும் மேற்பட்ட மிக முக்கிய துறைகளுக்குத் தனி அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் அனைத்து கோப்புகளும் கிடப்பில் இருந்து வந்தன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
59 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ்
Image Credit : Asianet News

59 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ்

இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் விஜய் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தார். அதன்படி அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற உள்ளதாக நேற்று இரவு தகவல் வெளியானது. இதில் தவெக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் மற்றும் வேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 59 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுகிறது.

Related Articles

Related image1
Tamilnadu Power Cut: மே 22ம் தேதி.! கோவை மட்டுமல்ல தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?
Related image2
CM Vijay: எதிர்பாராத ட்விஸ்ட்! டிரைவருக்காக கார் ஓட்டிய முதல்வர் விஜய்! வைரலாகும் போட்டோ!
35
 ஆளுநர் மாளிகை
Image Credit : Asianet News

ஆளுநர் மாளிகை

இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற உள்ள 23 பேர் கொண்ட பட்டியலை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத், ஆர்.கே.நகர் எம்எல்ஏ மரிய வில்சன், அவிநாசி எம்எல்ஏ கமலி, குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமி உள்ளிட்ட பெயர்கள் இடம் பெற்றுள்ளனர்.

45
23 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல்
Image Credit : Asianet News

23 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல்

ஸ்ரீநாத் - தூத்துக்குடி எம்எல்ஏ, கமலி - அவிநாசி எம்எல்ஏ, சி விஜயலட்சுமி - குமாரபாளையம் எம்எல்ஏ, ரஞ்சித் குமுார் - காஞ்சிபுரம் எம்எல்ஏ, வினோத் - கும்பகோணம் எம்எல்ஏ, ராஜீவ் - திருவாடானை எம்எல்ஏ, ராஜ் குமார் - கடலூர் எம்எல்ஏ, காந்திராஜ் - அரக்கோணம் எம்எல்ஏ, மதன் ராஜா - ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ, ஜெகதீஷ்வரி - ராஜபாளையம் எம்எல்ஏ, ராஜேஷ் குமார் - கிள்ளியூர் எம்எல்ஏ (காங்கிரஸ்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

55
காங்கிரஸ் கட்சியில் இரண்டு அமைச்சர்கள்
Image Credit : Asianet News

காங்கிரஸ் கட்சியில் இரண்டு அமைச்சர்கள்

அதேபோல் விஜய் பாலாஜி - ஈரோடு கிழக்கு எம்எல்ஏ, லோகேஷ் தமிழ் செல்வன் - ராசிபுரம் எம்எல்ஏ, விஜய் தமிழன் பார்த்திபன் - சேலம் தெற்கு எம்எல்ஏ, ரமேஷ் - ஸ்ரீரங்கம் எம்எல்ஏ, விஸ்வநாதன் - மேலூர் எம்எல்ஏ (காங்கிரஸ்), குமார் - வேளச்சேரி எம்எல்ஏ, தென்னரசு - ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ, சம்பத்குமார் - கோவை வடக்கு எம்எல்ஏ, முகமது பர்வாஸ் - அறந்தாங்கி எம்எல்ஏ, சரத்குமார் - தாம்பரம் எம்எல்ஏ, மரிய வில்சன் - ஆர்கே நகர் எம்எல்ஏ, விக்னேஷ் - கிணத்துக்கடவு எம்எல்ஏ என மொத்தம் 23 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இதில் 21 பேர் தவெகவை சேர்ந்தவர்கள். 2 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
தமிழக வெற்றி கழகம்
அரசியல்
இந்திய தேசிய காங்கிரஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: மே 22ம் தேதி.! கோவை மட்டுமல்ல தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?
Recommended image2
Now Playing
அமைச்சர் இருக்கையில் ஆதவ் அர்ஜூனாவை அமர வைத்து வாழ்த்திய முதலமைச்சர் விஜய்
Recommended image3
Now Playing
Fuel Price Hike Protest: பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு - சென்னையில் சிபிஐ(எம்) போராட்டம்!
Related Stories
Recommended image1
Tamilnadu Power Cut: மே 22ம் தேதி.! கோவை மட்டுமல்ல தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?
Recommended image2
CM Vijay: எதிர்பாராத ட்விஸ்ட்! டிரைவருக்காக கார் ஓட்டிய முதல்வர் விஜய்! வைரலாகும் போட்டோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved