Suspended DMK Councillor: சென்னையில் திமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம்! என்ன காரணம் தெரியுமா?
Suspended DMK Councillor: சென்னை மாநகராட்சி 113வது வார்டு கவுன்சிலர் திமுகவிலிருந்து நீக்கம். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் நீக்கம் என துரைமுருகன் அறிவிப்பு.
Chennai Corporation
சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதியில் சென்னை மாநகராட்சியின் 113வது வார்டு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த பிரேமா சுரேஷ் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
Duraimurugan
இதுதொடர்பாக அக்கட்சியில் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி 113வது மாமன்ற உறுப்பினர் பிரேமா சுரேஷ் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
DMK Councillor
இந்நிலையில் இதற்கான காரணமும் வெளியாகியுள்ளது. அதாவது பிரேமா சுரேஷ் சமீபத்தில் மழை பாதிப்புகள் தொடர்பாக பாஜக ஆதரவு தொலைக்காட்சிக்கு சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்திருந்தார்.
dmk
அதாவது சென்னையில் எதிர்பாராத அளவுக்கு மழை பெய்துள்ளதால் நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு மழை நீர் வடிகால் பணிகள் பழையது என்பதால் மழை நீரை வெளியேற்ற முடியவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதுதொடர்பான வீடியோ வைரலானது மட்டுமல்லாமல் கட்சி தலைமைக்கு புகார் சென்றது. இந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.