TASMAC Shop: டாஸ்டாக் கடைகளில் சூப்பர் திட்டம்!! அரசே ரூ.10 கொடுக்கிறது! கொண்டாட்டத்தில் குடிமகன்கள்!
TASMAC Shop: டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் மூலம் அரசுக்கு ரூ.45 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்தத் திட்டம் தற்போது 16 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
TASMAC
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகளை அரசு எடுத்து நடத்தி வருகிறது. இதில், வரும் வருமானத்தை வைத்து தான் இயந்திரமே இயங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது புதிய நடைமுறைகளும் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
TASMAC Shop
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பீர் மற்றும் மதுபானம் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. குடிமகன்கள் மது குடித்துவிட்டு, அந்த காலி பாட்டில்களை சாலைகளில் வீசிச் செல்வதால் கால்நடைகள் மட்டுமின்றி, மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவேதான், தமிழகத்தின் வனப்பகுதிகளிலும், மலைப்பிரதேசங்களிலும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகடாஸ்மாக் தரப்பில் புதிய முறை செயல்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு வெளியான ஷாக் தகவல்
TASMAC News
அதன்படி ரூ.10 அதிகமாக விற்கவும் குடித்த காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் ஒப்படைக்கும்போது, 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டம் கோவை, நீலகிரி, திருவாரூர், தேனி, தருமபுரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலில் உள்ளது. டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Tamilnadu Government
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில், காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு 45 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதில் 15 கோடி ரூபாய் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. காலி பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: School Holiday: வரும் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியானது சூப்பர் அறிவிப்பு!
Chennai High Court
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த திட்டம் காரணமாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையைப் பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.