MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! ஒரு லட்சம் வரை கடன்- 50ஆயிரம் ரூபாய் தள்ளுபடி- வெளியான சூப்பர் தகவல்

விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! ஒரு லட்சம் வரை கடன்- 50ஆயிரம் ரூபாய் தள்ளுபடி- வெளியான சூப்பர் தகவல்

சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதி ஏற்படுத்த மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 50% முதல் 70% மானியம் வழங்கப்படுகிறது. 

3 Min read
Author : Ajmal Khan
| Updated : Jun 19 2025, 07:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விவசாயிகளுக்கான திட்டங்கள்
Image Credit : our own

விவசாயிகளுக்கான திட்டங்கள்

விவசாயம் ஒரு நாட்டின் பொருளாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்கு முக்கியமானது. விவசாயம் மக்களுக்கு அடிப்படை உணவு தேவைகளை பூர்த்தி செய்கிறது. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்றவை விவசாயத்தால் மட்டுமே சாத்தியமாகின்றன. இந்தியா போன்ற நாடுகளில், விவசாயம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. 

இது ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியையும் ஈட்டுகிறது. விவசாயம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, நகர்ப்புற இடம்பெயர்வைக் குறைக்கிறது. விவசாயம் தமிழகத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இது மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
விவசாயிகளுக்கான கடன் உதவி
Image Credit : Asianet News

விவசாயிகளுக்கான கடன் உதவி

அதே நேரம் சிறு, குறு விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசுகள்  செயல்படுத்தி வருகிறது. அதில் நீர்பாசன வசதி ஏற்படுத்த மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டமும் ஒன்றாகும். சிறு, குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதி ஏற்படுத்த மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு பம்பு செட், மோட்டார், பைப்லைன், ஆழ்துளை கிணறு, சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன கருவிகள் வாங்குவதற்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணறு அமைக்க 50% மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட் அமைக்க 70% மானியம் மற்றும் 30% விவசாயிகள் பங்களிப்பு உள்ளது.

இதே போல மற்றொரு முக்கிய திட்டம் தான் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதி ஏற்படுத்துவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம், குறிப்பாக 50% மானியத்துடன் அதிகபட்சம் ரூ.1,00,000 வரை கடன் வழங்கும் திட்டம், தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய திட்டங்களில் ஒன்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) மூலம் வழங்கப்படுகிறது.

35
கடன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
Image Credit : our own

கடன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக குறிப்பாக ஆழ்துளைக் கிணறு, மோட்டார், பைப்லைன், சொட்டு நீர்ப்பாசனம் பொன்ற திட்டத்திற்கு மானியத்தோடு கடன் உதவி வழங்கப்படுகிறது. விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு இந்த திட்டம் பெரிதும் பயன் கொடுத்து வருகிறது.

மானிய கடன் உதவி பெற தகுதி:

பயனாளிகள்: பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. 

 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு குறைவாக உள்ளவர்கள் சிறு விவசாயிகளாகவும், 1.25 ஏக்கர் நஞ்சை அல்லது 2.5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு குறைவாக உள்ளவர்கள் குறு விவசாயிகளாகவும் கருதப்படுவர். எனவே மானிய கடன் பெற விண்ணப்பதாரர் சிறு மற்றும் குறு விவசாயி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், இது வட்டாட்சியர்  மூலம் வழங்கப்படுகிறது. இந்த ஆவணங்களை பெற்றிருக்க வேண்டும். 

கடன் மற்றும் மானிய விவரங்கள்:

கடன் தொகை: அதிகபட்சம் ரூ.1,00,000 வரை வழங்கப்படும் இந்த கடன் தொகையில் 50%  அதாவது அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை அரசு மானியமாக வழங்கப்படும். குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது 

கடன் திருப்பிச் செலுத்தும் காலம்: பொதுவாக 5 ஆண்டுகள் வரை.

பயன்படுத்தப்படும் துறைகள்:

புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தல். மின்மோட்டார், பம்பு செட், பைப்லைன், சொட்டு நீர்ப்பாசன அமைப்பு போன்றவை. சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட் அமைத்தல்.

45
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
Image Credit : Google

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

வருமானச் சான்று: குடும்ப வருமானத்தை உறுதிப்படுத்தும் ஆவணம்.

சாதிச் சான்று: BC/MBC/DNC வகுப்பினருக்கு தேவை

வங்கிக் கணக்கு விவரங்கள்: கடன் மற்றும் மானியம் செலுத்தப்படுவதற்கு.

புகைப்படங்கள்: 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

நில ஆவணங்கள்: பட்டா, சிட்டா, அடங்கல், புல வரைபடம்

அடையாளச் சான்று: ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை.

திட்ட மதிப்பீடு: ஆழ்துளைக் கிணறு அல்லது பிற நீர்பாசன உபகரணங்களுக்கான செலவு மதிப்பீடு.

55
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : Asianet News

விண்ணப்பிக்கும் முறை

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மாவட்ட அலுவலகம்.

வேளாண்மை பொறியியல் துறை அல்லது தோட்டக்கலை துறை மாவட்ட அலுவலகங்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண் துறை பிரிவு.

விண்ணப்பப் படிவம்:

TABCEDCO இணையதளம் (www.tabcedco.com) (www.tabcedco.com) அல்லது மாவட்ட அலுவலகத்தில் இருந்து படிவத்தைப் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆவணங்களை இணைத்து மானியத்தோடு கடன் பெற சமர்ப்பிக்க வேண்டும்.

வங்கி கணக்கில் பணம்

விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, தகுதி உறுதி செய்யப்பட்ட பிறகு, வங்கி மூலம் கடன் ஒப்புதல் அளிக்கப்படும். இதனையடுத்து மானியத் தொகை விவசாயியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
விவசாயக் கடன்
விவசாயம்
தமிழ்நாடு அரசு
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
பறவை காய்ச்சல் அபாயம்: கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா? மருத்துவர்கள் கூறும் முக்கிய வழிகாட்டுதல்கள்!
Recommended image2
TASMAC: டாஸ்மாக் கடைகளுக்கு ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு! தமிழக அரசுக்கு புதிய சிக்கலா? இனி புதிதாக மதுக்கடைகள் திறக்க முடியாதா?
Recommended image3
அமைச்சர் ராஜ்மோகன் கட்டியிருந்த வாட்ச் விலை ரூ.45 லட்சமா? அவரே கொடுத்த விளக்கம் என்ன?
Related Stories
Recommended image1
Mango : மாம்பழ விவசாயிகளுக்கு எதிர்பாரா குட் நியூஸ்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Recommended image2
சொத்துகளுக்கான பதிவு கட்டணத்தில் தள்ளுபடி.! தமிழ்நாடு அரசின் குஷியான அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved