- Home
- Tamil Nadu News
- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அள்ளிக்கொடுக்கும் அரசு.! விண்ணப்பிக்க இறுதி நாள் நெருங்குகிறது
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அள்ளிக்கொடுக்கும் அரசு.! விண்ணப்பிக்க இறுதி நாள் நெருங்குகிறது
2024-2025 கல்வியாண்டிற்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மற்றும் பிற கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.05.2025.

மாணவர்களுக்கான கல்வி உதவி திட்டங்கள்
கல்வி தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும். அந்த வகையில் மத்திய மாநில அரசுகள் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வி உதவி தொகை, இலவச பேருந்து திட்டம், மிதி வண்டி, மடிக்கணினி திட்டம் என திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம்
இதன் படி விண்ணப்பங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கருக்காக செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் பிற கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 2024-2025 ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்
தற்போது 2024-2025-கல்வியான்டிற்கு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.05.2025 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காத ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் இன UMIS (University Management Information System) என்ற இணையதளத்தில் (https://umis.tn.gov.in/) உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கல்லூரி நிர்வாகங்கள் மாணாக்கருக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க உதவிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.